» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவிலில் குண்டும், குழியுமாக சாலை : வாகன ஓட்டிகள் அவதி!

செவ்வாய் 23, ஜூலை 2024 11:52:46 AM (IST)



நாகர்கோவில் மாநகராட்சியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நாகர்கோவில் மாநகராட்சி 18வது வார்டுக்கு உட்பட்ட அனந்தன் பாலத்திலிருந்து ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு செல்லும் பிரதான சாலையின் நடுவே ஆபத்தான நிலையில்   ஏற்பட்டுள்ள பெரிய பள்ளம் இதனால்விபத்து ஏற்படும் ஆபத்து நிலவுகிறது.பள்ளம் இருப்பது தெரியாமல் வேகமாக வரும் வாகனங்கள் திடீரென நிறுத்துவதால் பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

தினம்தோறும் மருத்துவமனைக்கு 108 -ஆம்புலன்ஸ்கள் அதிகம் செல்லும் இந்த சாலை இப்படி கிடப்பதால் ஆம்புலன்ஸில் வரும் நோயாளிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்ப்படுவது மட்டுமல்லாமல் வேகமாக மருத்துவமனைக்கு செல்ல முடியாத காலதாமதமும் ஏற்பட்டு வருகிறது. மேலும் பல நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீர் சாலை ஓரங்களில் நடந்து செல்லும் பொது மக்களின் மீது தெறித்து வருகிறது. 

இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த சாலையில் தான் அதிகாரிகளும் வாகனத்தில் செல்கின்றனர். அவர்கள் கண்டு கொள்வதில்லை. குண்டும் குழியுமாக உள்ள சாலையை சரிசெய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory