» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பட்ஜெட் எதிரொலி: தங்கம் விலை குறைந்தது; வெள்ளி விலையிலும் அதிரடி மாற்றம்!

செவ்வாய் 23, ஜூலை 2024 5:34:40 PM (IST)

மத்திய பட்ஜெட்டில், தங்கம் இறக்குமதி வரி 6 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,200 குறைந்துள்ளது.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், அது தங்கம் விலையில் உடனடியாக எதிரொலித்துள்ளது. அதன்படி, இன்று பிற்பகலில், ஒரு சவரனுக்கு 2,200 குறைந்து ஒரு சவரன் தங்கம் 52,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல ஒரு கிராம் தங்கம் விலை ரூ.275 குறைந்து ரூ.6550க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி குறைந்துள்ளது. இதுவரை 15 சதவீதமாக இருந்த தங்கம், வெள்ளி பொருள்களுக்கான வரி தற்போது 6 சதவீதமாகவும், பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி 6.4 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வெள்ளி விலையிலும் அதிரடி மாற்றம் நடந்துள்ளது. வெள்ளி ஒரு கிராமுக்கு 3.50 சதவீதம் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.92.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இறக்குமதி வரி குறைப்பால், 24 காரட் 10 கிராம் தங்கம் விலை கிட்டத்தட்ட 4000 வரை குறைகிறது. தங்கத்தை இறக்குமதி செய்யும்போது விதிக்கப்படும் சுங்க வரியை 15% லிருந்து 6% ஆக குறைத்தது குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. தங்கம் விலை கடுமையாக உயர்ந்துவந்த நிலையில் 5% வரி குறைப்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உண்மையாகவே 9% வரிக் குறைப்பு என்பது ஆச்சரியத்துடன் அதிர்ச்சியையும் அளத்திருக்கிறது. இந்த வரிக் குறைப்பு, மக்கள் குறைந்த விலையில் தங்கத்தை வாங்க வழிவகுக்கிறது என்று வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory