» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று மனு தாக்கல் : மன்னிப்பு கோரிய இபிஎஸ் தரப்பு!

வெள்ளி 26, ஜூலை 2024 3:42:14 PM (IST)

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு மனு தாக்கல் செய்ததற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் இ.பி.எஸ். தரப்பு மன்னிப்பு கோரியது.
 
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்தும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தனர். 

இந்த வழக்கில், முன்னர் இணை ஒருங்கிணைப்பாளர் என பதில் மனு தாக்கல் செய்த இ.பி.எஸ். பிறகு பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு மனு தாக்கல் செய்து இருந்தார். 

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, அதிமுக பொதுச்செயலாளர் என எப்படி குறிப்பிட முடியும் என்று எடப்பாடிக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அந்த பதவி தொடர்பான மனு நிலுவையில் உள்ள போது, எப்படி பதவியை கூற முடியும் என நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியதால், தங்களது தவறுக்கு இ.பி.எஸ். தரப்பு மன்னிப்பு கோரியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory