» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஒலிம்பிக்கில் பதக்கங்களைக் குவித்து, நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் : இபிஎஸ் வாழ்த்து!

சனி 27, ஜூலை 2024 4:21:22 PM (IST)

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கணைகளுக்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது; "பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் துவங்கியுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்-வீராங்கனைகள், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜேஷ் ரமேஷ், ஸ்ரீராம் பாலாஜி, சந்தோஷ் குமார், சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ், பிரவீன் சித்திரவேல், விஷ்ணு சரவணன், நேத்ரா குமணன், பிரித்விராஜ் தொண்டைமான், இளவேனில் வாளரிவன், சரத் கமல் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தடகள உலகின் ஆகச்சிறந்த மேடையில் சிறப்பாக விளையாடி, பதக்கங்களைக் குவித்து, நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory