» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு ஆயுதம் ஏந்தி செல்லக்கூடாது - எஸ்பி அறிவுறுத்தல்!
திங்கள் 9, செப்டம்பர் 2024 8:21:50 PM (IST)
இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடி செல்வோர்கள் கடைபிடிக்கபட வேண்டிய பாதுகாப்பு விதிகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அறிவித்துள்ளார்.

மேலும் அஞ்சலி செலுத்த செல்பவர்கள் உட்கோட்ட காவல் அலுவலகங்கள் மூலம் பெறப்பட்ட வாகன அனுமதி சீட்டை தங்களது வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டி செல்ல வேண்டும். அனுமதி சீட்டு இல்லாமல் செல்ல அனுமதி இல்லை. வாகனங்களில் செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை மட்டுமே பயன்படுத்தி ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தாமல் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நினைவிடத்திற்கு செல்ல வேண்டும்.
வாகனங்களில் மேற்கூரையில் அல்லது படிக்கட்டில் பயணித்தோ, ஒலிப்பெருக்கிகள் பொருத்தியோ செல்ல கூடாது. வாகனங்களில் ஆயுதம் ஏதும் எடுத்து செல்லக்கூடாது. பட்டாசுகள் வெடிப்பதற்கு அனுமதி இல்லை. எந்தவித மதுபானங்களையும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. வாகனங்களில் சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
RameshSep 11, 2024 - 12:26:52 AM | Posted IP 162.1*****
💯❤️
RameshSep 11, 2024 - 12:26:51 AM | Posted IP 162.1*****
💯❤️
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை: 21ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!
புதன் 15, அக்டோபர் 2025 12:38:23 PM (IST)

தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: தமிழக அரசு
புதன் 15, அக்டோபர் 2025 12:26:15 PM (IST)

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு விஜய்தான் முக்கிய காரணம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
புதன் 15, அக்டோபர் 2025 12:05:32 PM (IST)

மோசடி ஆவணப் பதிவுகளை தடுக்க நடவடிக்கை: பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் கோரிக்கை
புதன் 15, அக்டோபர் 2025 10:38:37 AM (IST)

நாலுமாவடியில் ரூ.30 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை: மோகன் சி.லாசரஸ் திறந்து வைத்தார்
புதன் 15, அக்டோபர் 2025 10:10:54 AM (IST)

திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் குழுவை நியமிக்க நடவடிக்கை: உயர்நீதிமன்றம் கெடு
புதன் 15, அக்டோபர் 2025 8:43:17 AM (IST)

RameshSep 11, 2024 - 12:27:10 AM | Posted IP 172.7*****