» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது : முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு

வியாழன் 19, செப்டம்பர் 2024 5:15:57 PM (IST)

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும், 'ஒரே நாடு - ஒரே தேர்தல்' முறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக சட்டத்தை விரைவில் கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,' ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. பா.ஜ.,வின் ஈகோவை திருப்திப்படுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை பா.ஜ.,வால் நடை முறைக்கு கொண்டு வரமுடியாது.இந்தியாவின் வேறுபட்ட தேர்தல் நடைமுறை சிக்கல்களை கவனத்தில் கொள்ளவில்லை

வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு கட்சியின் ஆசைக்கு ஏற்ப இந்திய ஜனநாயகத்தை வளைக்க முடியாது. திசை திருப்பும் நடவடிக்கையில் நேரத்தை செலவிடாமல் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

JOHNSep 19, 2024 - 06:32:39 PM | Posted IP 172.7*****

தேர்தல் வந்தாள் திமுக ஆட்சியில் இருக்க முடியாது அதனால் தான் அப்படி முதல்வர் கூறுகிறார்

JOHNSep 19, 2024 - 06:27:26 PM | Posted IP 162.1*****

தேர்தல் வந்தாள் திமுக ஆட்சியில் அப்படி இருக்க முடியாது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory