» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் : அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!
வெள்ளி 15, நவம்பர் 2024 8:28:57 AM (IST)
"நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களுக்கு திமுக வரலாறு தெரியாது" என்று தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
தூத்துக்குடி திமுக பவள விழாவையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் குறிஞ்சி நகரில் நடைபெற்ற விழாவிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி 500 மகளிர்களுக்கு தையல்மிஷின் வழங்கி பேசுகையில் 1949ல் பேரறிஞர் அண்ணாவால் திமுக துவக்கப்பட்டு, 75 ஆண்டுகள் முடிவுற்ற பவளவிழா கொண்டாடப்படுகிறது.
வேர்களாக, விழுதுகளாக வளர்ந்து தற்போது ஆலமரமாக இருக்கிறது. அண்ணா தொடங்கிய இயக்கத்தை கலைஞர் வளர்ச்சியின் வழியில் கொண்டு சென்றார். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் தொழில் வளர்ச்சி வேலைவாய்ப்பு எல்லோரும் சமம் என்ற சமத்துவத்தின் மூலம் தமிழக முதலமைச்சர் தளபதியார் திராவிட மாடல் ஆட்சி செய்து வருகிறார்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது இரவு 9.50 மணிக்கெல்லாம் கடைகளை அடைக்க வேண்டும். இல்லையேல் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும் என்ற காலம் இருந்தது. தமிழக முதலமைச்சராக தளபதியார் பொறுப்பேற்றப்பின் இரவு 12 மணிவரை கடைகளை திறந்து வியாபாரம் செய்யலாம். உழைக்கும் வியாபாரிகளை நாம் சங்கடப்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
அப்போதைய அதிமுக ஆட்சிக்காலத்தில் தந்தை மகன் இறப்பு, துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது அப்பாவி மக்கள் உயிரிழப்பு என பல்வேறு துயரச்சம்பவங்கள் நடைபெற்றது. ஆனால் திமுக ஆட்சியில் யார், தவறு செய்தாலும் அது முதலமைச்சர் கவனத்திற்குச் செல்லும்போது முறையாக விசாரித்து தவறு செய்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
தூத்துக்குடி மாநகரில் புறநகர் பகுதியாக இருந்து இணைக்கப்பட்ட 5 ஊராட்சிப் பகுதிகளுக்கும் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் தினசரி குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பல தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தற்போது அந்தநிலை இல்லாமல் புதிய கழிவுநீர் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 420 கோடி மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டு பல்வேறு பூங்காக்கள், சாலைகள் என கட்டமைப்புகளை செய்துள்ளோம்.
சொன்னதையும் முதலமைச்சர் செய்கிறார், சொல்லாததையும் செய்கிறார். பெண்கள் வளர்ச்சிக்கு பெரியார் திட்டம் வகுத்தார். அதை கலைஞர் ஆட்சியின் போது சட்டமாக்கினார். சொத்தில் பெண்களுக்கு சமபங்கு மற்றும் சுயஉதவி குழு தொடங்கியது முதல் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீதம் என பல திட்டங்களை செயல்படுத்தி சாதனைப்படைத்தவர் கலைஞர். இந்த வரலாறு எல்லாம் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களுக்கு தெரியாது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி என அனைவருமே முதலமைச்சரின் வழியில் சமத்துவம், சம உரிமை, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், ஜாதி மதம் கிடையாது, எம்மதமும் சம்மதம் என்ற அடிப்படையில் திமுக ஒரு குடும்பமாக கடமை, கண்ணியம், கட்டுப்பாடு உடன் நடந்து வருகிறது. தமிழ் புதல்வன், புதுமை பெண் போன்ற திட்டத்தின் மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை இந்த ஆட்சி அமைந்தபின் உயர்த்தி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 1 கோடியே 16 லட்சம் பேருக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதை மறுபடி முறைப்படுத்தி புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும் வழங்கப்படும். பல நல வாரியங்கள் மூலம் பலரும் நன்மை அடைந்து வருகின்றனர். அதேபோல் மழை காலங்களில் தூத்துக்குடியைச் சேர்ந்த உப்பளத் தொழிலாளர்களுக்கு ரூ.5000 வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பெய்த மழை வெள்ள காலத்தின்போது சில பணிகள் முடங்கியது. மின்தடையால் பல இணையதளங்கள் இயங்கவில்லை. இருப்பினும் தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க ஒரு வாரத்தில் அதை முழுமையாக சீரமைக்கப்பட்டது. அத்திமரப்பட்டி, வேளாங்கன்னிநகர் பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசின் சார்பில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. கிராம புறப் பகுதிகளில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகிறது.
அனைத்து கிராம வளர்ச்சிக்கும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் வளர்ச்சிப்பணிகள் நடைபெறுகிறது. வீட்டு வசதி வாரியம் மூலம் ஹவுசிங் போர்டு ராஜீவ்நகர் பகுதியில் உள்ளவர்களுக்கு கலைஞர் ஆட்சியின் போது பட்டா வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் கணினி பட்டா வழங்கப்படவில்லை. இனி அது முறைப்படுத்தி வழங்கப்படும். திமுக அரசு பதவியேற்ற மூன்றை ஆண்டு காலம் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளது. சிலர் குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்று தேடி அழைகின்றனர். தமிழக முதலமைச்சர் 2026ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று முதலமைச்சர் நமக்கெல்லாம் இலக்கு நிர்ணயித்துள்ளார்கள். நாம் அதற்கு மேல் வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற சபதம் எடுக்க வேண்டும் என்று பேசினார்.
விழாவில் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளா்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், தமிழ்பிாியன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கா், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், ஜெயக்குமாா், மேகநாதன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், துணை அமைப்பாளர்கள் ரவி, செல்வின், பிரவீன்குமாா், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் டினோ, மாவட்ட மருத்துவ அணிதலைவர் அருண்குமாா், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நிக்கோலாஸ்மணி, மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, சிறுபான்மை அணி தலைவர் செய்யது காசிம், அமைப்பாளர் சாகுல்ஹமீது, மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் பெல்லா, கவுன்சிலர்கள் ஜான்சிராணி, வைதேகி, ஜெயசீலி, பவாணி, ஜாக்குலின்ஜெயா, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வகுமாா், வட்டச்செயலாளர்கள் சுப்பையா, செந்தில்குமாா், சதீஷ்குமாா், ராஜாமணி, கதிரேசன், முனியசாமி, வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் கருணா, மணி, ரேவதி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.