» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு: 4 கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவு

சனி 16, நவம்பர் 2024 4:53:55 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் ஆட்சியர் மற்றும் மேயர் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் 4 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி  மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.  

அப்போது பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேருந்து நிலையத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட  பகுதியை விட்டு பேருந்து நிலைய பயணிகள் செல்லும் வளாகப் பகுதியில் சுமார் 5 அடி நீளத்திற்கு வெளியே பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வியாபாரிகள் கடைகளை அமைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் பயணிகள் புகார் தெரிவித்தனர்

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் நான்கு கடைகளுக்கு உடனடியாக சீல் வைத்தனர். 

இது தொடர்பாக வியாபாரிகள் சங்கத்தினர் கூறுகையில் "பேருந்து நிலையத்தில் பல லட்ச ரூபாய் முதலீடு செய்து வியாபாரிகள் தங்கள் கடைகளை வாங்கி வியாபாரம் செய்து வரும் நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் கடை உரிமையாளர்களுக்கு எவ்வித முன்னறிவிப்பு மற்றும் நோட்டீஸ் வழங்காமல் திடீரென இவ்வாறு சீல் வைத்துள்ளது அவர்கள் வியாபாரத்தை முற்றிலுமாக பாதித்துள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீல் வைக்கப்பட்ட கடைகளை உடனடியாக திறக்க அனுமதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

மக்கள் கருத்து

NIXONNov 17, 2024 - 07:38:06 PM | Posted IP 172.7*****

Congrats Tutucorin Dist Collecter. Continue your right and hard work. Somany problems at Tutucorin Dist. Give me Appointment submit to sir . Sir take action. Tutucorin all peoples happy. NixonB. 7904567314.

arunNov 17, 2024 - 11:17:22 AM | Posted IP 172.7*****

நல்ல, விஸ்தாரமா இருந்த பஸ் ஸ்டாண்ட்ட கோழிக்கூண்டுமாதிரி ஆக்கிட்டாங்க. துப்புரவின்மைக்கு முழுமுதல் காரணம் இந்த கடைக்காரர்கள்தான். அதோடு மக்களும் சுகாதாரம் என்றால் என்ன என்பதை அறிந்து அதை பின்பற்ற வேண்டும்.

arunNov 17, 2024 - 11:17:07 AM | Posted IP 172.7*****

என்ன முன்னறிவிப்பு? கொடுக்கப்பட்ட இடத்தில்தான் கடைவைக்கவேண்டும் என்ற அறிவு இல்லையா?

arunNov 17, 2024 - 11:16:10 AM | Posted IP 162.1*****

என்ன முன்னறிவிப்பு? கொடுக்கப்பட்ட இடத்தில்தான் கடைவைக்கவேண்டும் என்ற அறிவு இல்லையா?

RaguNov 17, 2024 - 11:14:24 AM | Posted IP 162.1*****

நல்ல, விஸ்தாரமா இருந்த பஸ் ஸ்டாண்ட்ட கோழிக்கூண்டுமாதிரி ஆக்கிட்டாங்க. துப்புரவின்மைக்கு முழுமுதல் காரணம் இந்த கடைக்காரர்கள்தான். அதோடு மக்களும் சுகாதாரம் என்றால் என்ன என்பதை அறிந்து அதை பின்பற்ற வேண்டும்.

SelvamNov 17, 2024 - 10:25:11 AM | Posted IP 162.1*****

தயவு செய்து கழிவறை சரி செய்யவும்

முட்டாள் மக்கள்Nov 17, 2024 - 07:46:32 AM | Posted IP 162.1*****

ஸ்மார்ட் சிட்டி நா என்னது தெரியுமா? சிமெண்ட் சாலைகள் அமைத்தால் தினமும் சுத்தப்படுத்தி வைக்கணும் என்ற எல்லா நாட்டிலும் சட்டம் இருக்கு, இங்கு அரசியல்வாதிகள் கூமுட்டைகளுக்கு தெரியவில்லை சிமெண்ட் ரோட்டில் மண் தேங்காமல் இருக்க சுத்தப்படுத்தி வைப்பதே ஸ்மார்ட் சிட்டி, பொதுமக்கள் அங்கே எச்சில் துப்புகின்றனர், எச்சில் துப்பினால் மக்காமல் அப்படியே தேங்கி பொதுமக்களுக்கு நோய் பரவும், சிலர் குப்பை போடுகின்றனர், குப்பைத்தொட்டிகள் எங்கே வைத்தாலும் பொதுமக்கள் கீழ போட்டு விடுகின்றனர், சுத்தமாக வைக்க சொல்லுங்க, இனி எச்சில் துப்பினால் பைன் போட சொல்லுங்கள். துட்டு நிறைய வாங்க தெரியும், ஆனால் சுத்தமாக வைக்க சொல்லுங்கள்.

முட்டாள் மக்கள்Nov 17, 2024 - 07:46:30 AM | Posted IP 172.7*****

ஸ்மார்ட் சிட்டி நா என்னது தெரியுமா? சிமெண்ட் சாலைகள் அமைத்தால் தினமும் சுத்தப்படுத்தி வைக்கணும் என்ற எல்லா நாட்டிலும் சட்டம் இருக்கு, இங்கு அரசியல்வாதிகள் கூமுட்டைகளுக்கு தெரியவில்லை சிமெண்ட் ரோட்டில் மண் தேங்காமல் இருக்க சுத்தப்படுத்தி வைப்பதே ஸ்மார்ட் சிட்டி, பொதுமக்கள் அங்கே எச்சில் துப்புகின்றனர், எச்சில் துப்பினால் மக்காமல் அப்படியே தேங்கி பொதுமக்களுக்கு நோய் பரவும், சிலர் குப்பை போடுகின்றனர், குப்பைத்தொட்டிகள் எங்கே வைத்தாலும் பொதுமக்கள் கீழ போட்டு விடுகின்றனர், சுத்தமாக வைக்க சொல்லுங்க, இனி எச்சில் துப்பினால் பைன் போட சொல்லுங்கள். துட்டு நிறைய வாங்க தெரியும், ஆனால் சுத்தமாக வைக்க சொல்லுங்கள்.

இந்தியன்Nov 16, 2024 - 11:20:41 PM | Posted IP 162.1*****

மேயர்,ஆட்சியர்,ஆணையாளர் அனைவர்க்கும் நன்றி

தமிழன்Nov 16, 2024 - 11:15:43 PM | Posted IP 172.7*****

வாழ்த்துக்கள். கொஞ்சம் இடம் கிடைத்தால் போதும் பஸ் ஸ்டாண்டை முழுமையாக ஆக்கிரமித்து விடுவார்கள். இது போல் அடிக்கடி வர வேண்டும்

உண்மை விளம்பிNov 16, 2024 - 09:43:07 PM | Posted IP 172.7*****

அப்படியே பேருந்து நிலையத்தின் சுவர்களில் விளம்பர நோட்டீஸ் ஓட்டுவதையும் தடை செய்ய வேண்டும்.

m.sundaramNov 16, 2024 - 07:56:21 PM | Posted IP 172.7*****

The shop owners open their shop after signing the agreement contained all details. Since the shops owners knows the agreement very well intentionally encroaches the passengers pathway. Supporting such defaulters is against the rule of law and . Supporting the defaulters will encourage them to do more such wrong doing against the public. No compromise should be made in this connection. Heavy fine must be imposed for the first time. If they commit the same crime their license must be cancelled after following the legal procedure. Kudos to the Dist Collector for taking bold action.

raamNov 16, 2024 - 07:39:28 PM | Posted IP 162.1*****

திமுக பன்னாடைகள் கடைகளுக்கு ஏன் சீல் வைக்கவில்லை மிஸ்டர் மங்குனி கலெக்டர் இதுதான் உங்க அதிரடி ஆக்சனா? உங்க வேகம் வீடு வரையிலும் கிழியுது போங்க சார் போய் புள்ளகுட்டிகள படிக்க வைங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.

மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Tirunelveli Business Directory