» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முட்டம் சுற்றுலாத்தளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்!

செவ்வாய் 26, நவம்பர் 2024 4:54:39 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் சுற்றுலாத்தளத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். 

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.11.2024) தலைமைச் செயலகத்தில், சுற்றுலாத் துறை சார்பில் 27 கோடியே 34 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதில், கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் கடற்கரையில் 2 கோடியே 84 இலட்சத்து 7 ஆயிரம் ரூபாய் செலவில் பார்வையாளர்கள் மாடம், குழந்தைகள் விளையாடுமிடம், சென்ட்ரல் பிளாசா, நுழைவுச்சீட்டு வழங்குமிடம், தகவல் பலகை, சிற்பங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.  

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் சுற்றுலாத்தளத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்ததைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, குத்துவிளக்கேற்றி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகையில்- கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முதல் ஐந்து சுற்றுலாத்தளங்களில் முட்டம் கடற்கரை ஐந்தாவது இடம் பெற்றுள்ளது. 

முட்டம் கடற்கரையானது கன்னியாகுமரியில் இருந்து சுமார் 32 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது ஒரு கம்பீரமான பாறைகள் நிறைந்த கடற்கரையாகும். இங்குள்ள பாறைகள் மேல் அலைகள் மோதி பனிபோல் சிதறுவது கண்கொள்ளாக் காட்சியாகும். இங்கு ஆண்டுக்கு சுமார் 30 ஆயிரம் உள்நாடு மற்றும் அயல்நாடு சுற்றுலாப்பயணிகள் இப்பகுதிக்கு வருகை புரிகின்றனர்.

2022-2023 ஆம் ஆண்டு சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை அறிவிப்பின்படி முட்டம் கடற்கரை பகுதியில் சுற்றுலா வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு ரூ.2.84கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் பணிகள் மேற்கொள்வதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.

முட்டம் கடற்கரை பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கழிவறைகள், சிறுவர் பூங்கா, சூரிய கடிகாரம், வாகன நிறுத்துமிடம், சாவினர் சாப், நுழைவுச்சீட்டு வழங்கும் கட்டிடம், நடைபாதை, மின்விளக்கு உட்பட பல்வேறு சுற்றுலா வளர்ச்சி திட்டப்பணிகள் சுற்றுலாத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் சுற்றுலாதளத்தில் தினமும் குப்பைகள் அகற்றியும், கழிப்பறைகளை சுத்தப்படுத்தி சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். தெருவிளக்குகள், உணவகங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் சுற்றுலா வரும் பயணிகளுக்கு உற்ற நண்பர்களாக இருந்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பினையும், சுற்றுலாதளம் குறித்து வழிகாட்டுதல்களை வழங்கவேண்டும். முட்டம் சுற்றுலாத்தளத்தினை பராமரிக்கும் பொறுப்பு முட்டம் ஊராட்சியிடம் ஒப்படைக்கப்படுகிறது. முட்டம் கடற்கரையின் சுற்றுலா பயணிகள் வாயிலாக கிடைக்கப்பெறும் வருமானத்தினை முட்டம் ஊராட்சி நிர்வாகமே பயன்படுத்தி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். 

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடற்கரை சுற்றுலாத்தளத்தினை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் இப்பணிகளுக்கு உறுதுணையாக இருந்த நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலைநிலை மாற்றத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் அவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், முட்டம் ஊராட்சி பொதுமக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துகொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா பேசினார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கேற்றி, சுற்றுலாத்தளத்தினை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அனுசியா தேவி, முட்டம் ஊராட்சிமன்ற தலைவர் நிர்மலா, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் எனல்ராஜ், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் விஜி அனனியாஸ், ராண் அபிஷேக், முட்டம் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் ஜெரால்டு, முட்டம் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜாண்சன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory