» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புயல் உருவாக மேலும் தாமதம்: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

வியாழன் 28, நவம்பர் 2024 12:24:40 PM (IST)

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 2 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதால் புயல் உருவாவதில் மேலும் தாமதமாகியுள்ளது. 

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நவம்பர் 30ம் தேதி கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. காரைக்கால் மாமல்லபுரம் இடையே இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புயல் உருவாக மேலும் தாமதமாகியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 480 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.

கடந்த நில மணி நேரங்களாக நகராமல் இருந்த நிலையில், தற்போது மணிக்கு 2 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பேரிடர் மீட்பு படையினர் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளிலும் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory