» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஃபெங்கல் புயல் நாளை கரையை கடக்கிறது : 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்!

வெள்ளி 29, நவம்பர் 2024 11:21:05 AM (IST)

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, நாளை (நவ.30) கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகி புதுச்சேரி மற்றும் சென்னைக்கு இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 400 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 360 கிலோ மீட்டர் தொலைவிலும் வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது.

கரைக்கு அருகில் புயலாக வலுப்பெறுகின்ற காரணத்தால் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வட கடலோர மாவட்டத்தில் மழை பொழிவு அதிகம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஆந்திராவிலும் மழை பொழிவு இருக்கும் என தெரிவித்துள்ளது. தற்போது மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. முன்னதாக, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அது புயலாக மாறும் என தெரிவித்துள்ளது.

இதன் காரண​மாக, செங்​கல்​பட்டு, விழுப்பு​ரம், கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்றும், கனமழைக்கான அலர்ட் விடுக்​கப்​பட்​டுள்​ளது.

இரு தினங்களுக்கு ரெட் அலர்ட்: இன்று (வெள்ளிக்கிழமை) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் கன முதல் மிக கனமழை வரையும், சில இடங்களில் அதி கனமழை வரையும் பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை மிக கனமழை பெய்யக் கூடும். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை - நவ.30 (சனிக்கிழமை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழை வரையும், சில இடங்களில் அதி கனமழை வரையும் பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை, தி.மலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்யக் கூடும். திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, தரும்பரி, நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory