» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் பெண் மருத்துவர் மீது தாக்குதல் : கணவர் கைது
வெள்ளி 29, நவம்பர் 2024 4:43:55 PM (IST)
தூத்துக்குடியில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து பெண் மருத்துவரை தாக்கிய அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி பக்கிள்புரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயசீலன் மகன் டேனியல்ராஜ் (36). இவர் பாத்திமா நகரைச் சேர்ந்த ரேவதி (35) என்ற பெண்ணை கடந்த 2022ல் காதல் திருமணம் செய்து கொண்டார். ரேவதி, பிரையன்ட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணி புரிந்து வருகிறார்.
குடும்ப பிரச்சனை காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் நேற்று ரேவதி மருத்துவமனையில் பணி செய்து கொண்டிருந்த போது மதுபோதையில் டேனியல்ராஜ், அங்கு சென்று தகராறு செய்து அவரை கையால் தாக்கினாராம். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் ரேவதி அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்தமழரசன் வழக்குப் பதிந்து டேனியல் ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
வியாழன் 19, மார்ச் 2026 5:08:32 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் : கண்காணிப்புப் பணி தீவிரம்!
வியாழன் 19, மார்ச் 2026 4:12:25 PM (IST)

எடப்பாடி கே. பழனிசாமி டெல்லி சென்றால் என்ன தவறு? - தமிழிசை காட்டம்
வியாழன் 19, மார்ச் 2026 3:59:11 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய கிளை திறப்பு விழா
வியாழன் 19, மார்ச் 2026 3:14:59 PM (IST)

குமரி வெங்கடாஜலபதி கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பு விழா: திரளான பக்தர்கள் தரிசனம்
வியாழன் 19, மார்ச் 2026 12:54:33 PM (IST)

தமிழகத்திற்கு 5 தலைநகரங்கள்: நாம் தமிழர் கட்சியின் அதிரடி தேர்தல் அறிக்கை வெளியீடு
வியாழன் 19, மார்ச் 2026 12:36:50 PM (IST)

