» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வாடகை கட்டடங்களுக்கு 18% ஜிஎஸ்டி: மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!!
வெள்ளி 29, நவம்பர் 2024 5:47:56 PM (IST)
வாடகை கட்டடங்களுக்கு 18% ஜிஎஸ்டி விதித்து பெரும் சுமையை வணிகர்கள் தலையில் ஏற்றும் மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வாடகைக் கட்டடங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பை எதிர்த்து வணிகர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா பெருந்தொற்றில் ஏற்பட்ட சரிவில் இருந்து வணிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்ற இந்த வேளையில், வாடகை கட்டடங்களுக்கு ஜிஎஸ்டி வரி எனும் பெரும் சுமையை அவர்கள் தலையில் ஏற்றும் ஒன்றிய அரசுக்கு எனது கடும் கண்டனம். வியாபாரிகளின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் இந்த வாடகைக் கட்டடங்களுக்கான 18% ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசையும் , உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மின்கம்பத்தில் தொங்கியவாறு கேங்மேன் மரணம் : போலீஸ் விசாரணை!
சனி 13, செப்டம்பர் 2025 5:46:58 PM (IST)

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளராக வீரபாண்டியன் தேர்வு
சனி 13, செப்டம்பர் 2025 5:30:14 PM (IST)

விஜய்யின் தி.மு.க. எதிர்ப்பு ஆரோக்கியமானது: தமிழிசை பேட்டி!
சனி 13, செப்டம்பர் 2025 4:49:11 PM (IST)

ரயிலில் கார்களை கொண்டு செல்ல சேவை தொடங்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
சனி 13, செப்டம்பர் 2025 4:19:08 PM (IST)

கல்வி கடன் ரத்து தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? திமுக அரசுக்கு விஜய் கேள்வி!
சனி 13, செப்டம்பர் 2025 4:10:06 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகளவில் வருகிறது: கனிமொழி எம்பி பேச்சு!
சனி 13, செப்டம்பர் 2025 3:54:37 PM (IST)
