» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புயல் சேதங்களுக்கு 1,000 கோடி நிவாரண நிதி ஒதுக்க வேண்டும் : விஜய்வசந்த் கோரிக்கை
திங்கள் 2, டிசம்பர் 2024 12:06:42 PM (IST)
புயல் சேதங்களுக்கு மத்திய அரசு உடனடியாக 1,000 கோடி நிவாரண நிதியை வழங்க வேண்டும் விஜய்வசந்த் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஃபெங்கால் புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அவசர பாதிப்பு குறித்து விவாதிக்க கன்னியாகுமரி எம்.பி விஜய்வசந்த் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர மனு அளித்தார். மேலும் புயலால் உள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் மனித உயிர்களுக்கு ஏற்பட்டுள்ள விரிவான சேதத்தை எடுத்துரைத்த அவர், உடனடியாக மத்திய அரசு தலையிட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
மேலும் 1,000 கோடி நிவாரண நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என்றும், சேதங்களை மதிப்பீடு செய்ய நிபுணர் குழுவை அனுப்ப வேண்டும் என்றும் விஜய் வசந்த் வலியுறுத்தியுள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கருணைத் தொகை வழங்கவும் வலியுறுத்தினார்.