» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஊழியர்களுக்கு இருக்கை வழங்காத 45 கடைகள் மீது நடவடிக்கை : ஆட்சியர் இளம்பகவத் தகவல்!

வியாழன் 5, டிசம்பர் 2024 3:55:41 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாளர்கள் அமர்வதற்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்தி தராத 45 கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

கடைகள் மற்றும் நிறுவனங்களில் நின்று கொண்டே பணிபுரியும் பணியாளர்கள் பணியிடையே அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி அமர்வதற்கு ஏதுவாக நிறுவன வளாகத்தில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தி தர, 1947 ஆம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் புதிய பிரிவு 22-A தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தம்) சட்டம் 2021 மூலம் சேர்க்கப்பட்டு தமிழ்நாடு அரசு அசாதாரண அரசிதழ் எண்.465, நாள்: 01.10.2021 மூலம் வெளியிடப்பட்டு 04.10.2021 முதல் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டதற்கிணங்க, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் பிரிவு 22-A-ன் படி அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாளர்கள் அமர்வதற்கு நிறுவன வளாகங்களில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் 02.12.2024 மற்றும் 03.12.2024 ஆகிய நாட்களில் சிறப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு, முரண்பாடுகள் காணப்பட்ட 45 கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், அவர்கள் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

மக்கள்Dec 5, 2024 - 06:52:53 PM | Posted IP 172.7*****

வாழ்த்துக்கள். வரவேற்கவேண்டிய விஷயம் வேலவன் ஹைப்பர் சென்று பார்க்கவும்.

சட்டம்Dec 5, 2024 - 05:18:52 PM | Posted IP 172.7*****

எல்லா பலசரக்கு கடை, ஜவுளி கடை, நகை கடை நின்னுதான் வேலை பார்க்காங்க, பாப்போம் சட்டம் சொல்லுவதை எத்தனை பேர் ஏற்று செயல்முறை செய்கின்றார்கள் என்று. தர்மம் தலை காக்கும் , இந்த சட்டம் அவர்களின் உடல் நலத்தை காக்கட்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory