» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஏற்றுமதி சரக்குகளை கொண்டு செல்வதில் முறைகேடு : சுங்க இலாகா அலுவலகத்தில் ஏற்றுமதியாளர்கள் முற்றுகை!

வியாழன் 2, ஜனவரி 2025 3:29:05 PM (IST)



அனுமதியின்றி ஏற்றுமதி சரக்குகளை தூத்துக்குடிக்கு கன்டெய்னர் மூலம் எடுத்து வருவதை தடை செய்யக்கோரி திருப்பூரைச் சார்ந்த ஏற்றுமதியாளர்கள் தூத்துக்குடியில் சுங்க இலாகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதியாகும் சரக்குகள் கண்டெய்னர் லாரிகள் மூலம் இறக்குமதியாளர் பகுதி வரை கொண்டு செல்வதற்காக வரிவிலக்கு பெற்று கண்டெய்னர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு வரி விலக்கு பெற்று திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும் சரக்கு பெட்டகங்களில் உள்ள சரக்குகளை அங்கே இறக்கி வைத்த பின் அதே சரக்கு பெட்டகத்தில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஏற்றுமதி சரக்குகளை எந்தவித அனுமதியும் பெறாமல் ஏற்றி தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வருகின்றனர்.

வரி விலக்கு பெற்ற சரக்கு பெட்டகத்தில் மீண்டும் சரக்குகளை ஏற்றி கொண்டு வருவதன் காரணமாக சுங்க இலாக்காவிற்கு பல கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமன்றி ஏற்றுமதி சரக்குகளுக்கு காப்பீடு போன்றவை கிடைக்காமல் போகிறது. இவ்வாறு நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 சரக்கு பெட்டகங்களில் முறையற்ற வகையில் திருப்பூர் மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு சரக்குகளை ஏற்றி வருவதால் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்படுகிறது.

மேலும் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கண்டெய்னர் லாரிகள் வைத்து தொழில் செய்பவருக்கும் தொழில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏற்றுமதியாளர்கள் மற்றும் சரக்கு கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று தூத்துக்குடி சுங்க இலாக அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர் சுங்கத்துறை ஆணையர் இணை ஆணையரிடம் புகார் அளித்தனர்.

இவ்வாறு முறைகேடாக சுங்க இளகாவிற்கு வரி இழப்பு செய்யும் வகையில். ஈடுபடும் கண்டெய்னர் லாரிகள் மீது மற்றும் தூத்துக்குடியில் உள்ள பல்வேறு சரக்கு பெட்டக முனையங்கள் இது மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் காரணமாக பல்வேறு கடத்தல் சம்பவங்களும் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர் மேலும் சரக்கு பெட்டக முனையங்களில் பணத்தை பெற்றுக் கொண்டு இந்த செயல் நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டினர், மேலும் இந்த முறைகேடு சம்பவம் தொடர்பாக மத்திய கப்பல் துறை அமைச்சகம் மற்றும் மத்திய நிதி அமைச்சகத்திடம் புகார் தெரிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். 

இதில், ஐக்கிய ஜனதா தளம் தொழிலாளரணி மாநில தலைவர் மற்றும் மாநில தொழிற்சங்க பேரவை தலைவர் தாமரை வெங்கடேசன் தலைமையில், மாநில செயலாளர் மாரிமுத்து , தூத்துக்குடி மாவட்ட தலைவர் டிஎம் குழந்தை பாண்டி,  மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் வர்க்கீஸ், மாநகர தலைவர் ராபர்ட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

ESAKKIAPPAN M.Jan 4, 2025 - 11:34:00 AM | Posted IP 172.7*****

இறக்குமதி பண்றவங்க, மற்றும் ஏற்றுமதி பண்றவங்க ரெண்டு ரெண்டுமே ஒரு வகையை சார்ந்தவங்கதான். தூத்துக்குடியில் இருந்து இறக்குமதி பண்ணி கொண்டு போற சரக்கு பெட்டகங்களுக்கு கொடுக்கும் வாடகையை சரியான விகிதத்துல கொடுத்துட்டா லாரி உரிமையாளர்கள் ஏன் ரிட்டர்ன் லோடு ஏத்திட்டு வர போறாங்க. ஒரு நாளைக்கு முன்னாலேயே அடுத்த சர்வீஸ் க்கு வண்டி மீண்டும் தூத்துக்குடிக்கு வந்து விடுமே. தவிர திருப்பூரில் சரக்கு ஏற்றி அனுப்புபவர்கள் ஒன்றும் சாதாரண பிரஜை அல்ல, அவர்களும் ஏற்றுமதியாளர்களே... அவர்கள் தங்கள் செலவை குறைப்பதற்குத்தானே இப்படி செய்கிறார்கள். அவர்களே ஏற்றுவார்கள் அவர்களே போராட்டமும் செய்வார்கள். பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது ..... மொத்தத்தில் பாதிக்கப்படுவது என்னவோ எதோ ஒரு லாரி உரிமையாளர் தான் என்பது மட்டும் நிதர்சனம்

GannuJan 4, 2025 - 12:09:14 AM | Posted IP 162.1*****

If the loss pertains to central government, then make a complaint to CBI, @04522562258

Adv babuJan 3, 2025 - 06:19:14 AM | Posted IP 172.7*****

Nenga complaint panna vendiya idam RTO and police ana athuku avangalum onnum panna mudiyathe govt la ithula goods yetha allow ilai nu rules ilai ithuku customs yenna panna mudiyum ?container yethitu poravanga rtn nadai kidacha konjam labam nu yethitu varanga tirupur la irunthu Inga Vara lorry ku nenga load book Pani kudukama Vita ithu sari airum avlo than

RajJan 2, 2025 - 11:48:28 PM | Posted IP 162.1*****

திருப்பூர் லாரி உரிமையாளர்களின் பயங்கரணமா உருடடு வேலை

RajJan 2, 2025 - 11:43:54 PM | Posted IP 172.7*****

திருப்பூர் லாரி ஒனெர்களின் தவறான தகவல்கள்

KalisamyJan 2, 2025 - 11:41:19 PM | Posted IP 162.1*****

திருப்பூர் லாரி ஒனர்களின் தவறான தகவல்கள்

சுந்தர்Jan 2, 2025 - 05:28:54 PM | Posted IP 162.1*****

எப்படி வரி விலக்கு பெற்ற சரக்கு பெட்டகத்தில் மீண்டும் சரக்குகளை ஏற்றி கொண்டு வருவதன் காரணமாக சுங்க இலாக்காவிற்கு பல கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படுகிறது..? இது பயங்கர உருட்டா இருக்கே.!

சுந்தர் பிச்சைJan 2, 2025 - 03:48:40 PM | Posted IP 172.7*****

எப்படி... எப்படி...வரி விலக்கு பெற்ற சரக்கு பெட்டகத்தில் மீண்டும் சரக்குகளை ஏற்றி கொண்டு வருவதன் காரணமாக சுங்க இலாக்காவிற்கு பல கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படுகிறது. என கூசாமல் பொய் சொல்கிறார்களே..

சுந்தர் பிச்சைJan 2, 2025 - 03:48:40 PM | Posted IP 162.1*****

எப்படி... எப்படி...வரி விலக்கு பெற்ற சரக்கு பெட்டகத்தில் மீண்டும் சரக்குகளை ஏற்றி கொண்டு வருவதன் காரணமாக சுங்க இலாக்காவிற்கு பல கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படுகிறது. என கூசாமல் பொய் சொல்கிறார்களே..

சுந்தர் பிச்சைJan 2, 2025 - 03:48:40 PM | Posted IP 172.7*****

எப்படி... எப்படி...வரி விலக்கு பெற்ற சரக்கு பெட்டகத்தில் மீண்டும் சரக்குகளை ஏற்றி கொண்டு வருவதன் காரணமாக சுங்க இலாக்காவிற்கு பல கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படுகிறது. என கூசாமல் பொய் சொல்கிறார்களே..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory