» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பள்ளியில் சிறுமி உயிரிழந்த விவகாரம் : தாளாளர் உள்ளிட்ட 3 பேருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன்!!
வெள்ளி 10, ஜனவரி 2025 5:35:16 PM (IST)
விக்கிரவாண்டி பள்ளிச்சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 3 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் கழிவறைக்குச் சென்ற 3ம் வகுப்பு சிறுமி கழிவறை தொட்டியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் தனியார் பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பாசிரியர் ஏஞ்சல் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள், சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை நடைபெற்று வருவதால் ஜாமீன் தர காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர் 3 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 3 பேரும் சென்னையில் ஒரு வாரம் தங்கியிருந்து, மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று கூறினார்.
பள்ளி தாளாளர், முதல்வர் ஆகியோர் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
திங்கள் 27, அக்டோபர் 2025 12:04:26 PM (IST)

மோந்தா புயல்: தூத்துக்குடி துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!
திங்கள் 27, அக்டோபர் 2025 11:47:26 AM (IST)

வாக்காளர் பட்டியலை அனைவரும் மிக மிக கவனத்துடன் சரி பார்க்க வேண்டும்: கனிமொழி எம்.பி.
திங்கள் 27, அக்டோபர் 2025 11:34:07 AM (IST)

கரூர் துயர சம்பவம்: பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து விஜய் ஆறுதல்!
திங்கள் 27, அக்டோபர் 2025 11:24:11 AM (IST)

சங்ககால வரலாற்று குறிப்புகள் குறித்து பகுப்பாய்வு : அரசுக்கு தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை!
திங்கள் 27, அக்டோபர் 2025 10:39:12 AM (IST)

2026 தேர்தல் திமுகவிற்கு சோதனையாக இருக்கும் : கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ பேச்சு பேச்சு!
திங்கள் 27, அக்டோபர் 2025 10:22:18 AM (IST)




