» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொங்கல் பரிசு தொகுப்பை போல திமுக அரசை மக்கள் புறக்கணிப்பார்கள்: பிரேமலதா விஜயகாந்த்
சனி 18, ஜனவரி 2025 4:21:35 PM (IST)
தமிழக மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை புறக்கணிப்பதைப் போல, வெகு விரைவில் 2026ல் இந்த ஆட்சியையும் புறக்கணிப்பார்கள் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் ஒருகிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகிய மூன்று பொருட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது, ரொக்க பணம் வழங்கப்படவில்லை. மொத்தம் 2.21 கோடி ரேஷன் அட்டை தாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட பரிசு தொகுப்பை, 1.87 கோடி பேர் வாங்கியுள்ளனர். மீதி 33 லட்சம் பேர் வாங்கவில்லை.
விளம்பர மாடல் ஆட்சியிலே பொங்கலுக்கு வழங்கிய பரிசு தொகுப்பினை மக்கள் புறக்கணித்துள்ளனர். கொடுத்த அரிசியும், சர்க்கரையும் எடை குறைவாக வழங்கப்பட்டதாகவும், திமுக அரசு வாக்குறுதிப்படி ரொக்கப் பணம் கொடுக்காததாலும், தமிழக மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை புறக்கணிப்பதைப் போல, வெகு விரைவில் 2026ல் இந்த ஆட்சியையும் புறக்கணிப்பார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த அரசின் மீது அதிருப்தியால் தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என தெரிவித்துள்ளார் .
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோயில் காவலர் அஜித்குமாரை தாக்கியது ஏன்? காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
திங்கள் 30, ஜூன் 2025 5:21:08 PM (IST)

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக வி.பி.ராமலிங்கம் பதவியேற்பு
திங்கள் 30, ஜூன் 2025 5:11:50 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

தமிழக தொழில்துறை தோல்வியடைந்து விட்டது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
திங்கள் 30, ஜூன் 2025 12:36:51 PM (IST)

வீடுகளுக்கான மின் கட்டண உயராது; 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் - அமைச்சர் விளக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:45:26 AM (IST)

சாலைத் தடுப்புச்சுவரில் மோதி எலக்ட்ரிக் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது: 21 பேர் காயம்!
திங்கள் 30, ஜூன் 2025 8:42:32 AM (IST)
