» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சட்டமன்ற தேர்தலில் த.வெ.க.வுடன் கூட்டணி : தமிழ்நாடு முஸ்லிம் லீக் மறுப்பு
புதன் 19, பிப்ரவரி 2025 12:05:05 PM (IST)

தவெகவுடன் கூட்டணி என்று சமூகவலைதளங்களில் வரும் தகவல்கள் எதுவும் உண்மையில்லை என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா கூறியுள்ளார்.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு செயல்பட்டு வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 234 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு குறித்து பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன் இணைந்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இந்நிலையில் த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்தை தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா தலைமையில் நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து பேசினர். நிகழ்ச்சியின் போது தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உடன் இருந்தார்.இதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. கூட்டணியுடன் தமிழ்நாடு முஸ்லிம் லீக் இணையும் என தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், தவெகவுடன் கூட்டணி என்று சமூகவலைதளங்களில் வரும் தகவல்கள் எதுவும் உண்மையில்லை என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா கூறியுள்ளார்.
இது தொடர்பாக முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று தவெக தலைவரும் நடிகருமான அன்பு சகோதரர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து அரசியல் களத்திற்கு வந்ததற்காக வாழ்துகளை தெரிவித்தோம். அவரும் உங்களது இயக்கம் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். தேர்தல் நேரத்தில் அதுபற்றி கட்சியினரோடு கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக கூறினோம். மேலும் சமூகவலை தளங்களில் கூட்டணி தொடர்பாக வரும் தகவல்கள் எதுவும் உண்மையில்லை. இந்த நல்லதொரு சந்திப்பினை ஏற்பாடு செய்து கொடுத்த சகோதரர் ஆதவ் அர்ஜுனாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னையில் தொடர் நகைப் பறிப்பில் ஈடுபட்டவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!
புதன் 26, மார்ச் 2025 10:43:33 AM (IST)

தமிழகத்தில் 3 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்!
புதன் 26, மார்ச் 2025 10:26:51 AM (IST)

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
புதன் 26, மார்ச் 2025 8:06:49 AM (IST)

இளம்பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 26, மார்ச் 2025 7:56:22 AM (IST)

பாரதியாா் இல்லத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்: பொதுமக்கள் அதிச்ச்சி
புதன் 26, மார்ச் 2025 7:40:06 AM (IST)

லஞ்சம் பெற்ற சார் பதிவாளருக்கு தலா 3 ஆண்டு சிறை: 12 ஆண்டுகளாக நடந்த வழக்கில் தீர்ப்பு!
செவ்வாய் 25, மார்ச் 2025 8:47:50 PM (IST)
