» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக கட்சி ஒன்றிணைந்தால்தான் தேர்தலில் வெல்ல முடியும் : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

புதன் 19, பிப்ரவரி 2025 5:00:58 PM (IST)

"அதிமுக கட்சி ஒன்றிணைந்தால்தான் தேர்தலில் வெல்ல முடியும்" என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

திருப்பூரில் அவர் அளித்த பேட்டி: அதிமுகவுக்கு உழைக்கும் உன்னதத் தொண்டன்தான் செங்கோட்டையன்; கட்சிக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர். எதையும் எதிர் பார்க்காமல் உழைப்பவர். ஆர்.பி. உதயகுமார், ஜெயக்குமார் உள்ளிட்டோர் சிரிப்பு அரசியல்வாதிகள். 

அவர்களுக்கு பதில் சொல்ல நான் தயாராக இல்லை. அவர்கள் பேசுவதை பேசட்டும்; மக்கள் பார்த்துக்கொள்வார்கள். அதிமுக கட்சி ஒன்றிணைந்தால்தான் தேர்தலில் வெல்ல முடியும் என்பதை தொண்டர்கள் உணர்ந்துள்ளனர். கட்சி ஒருங்கிணைப்புக்கான பேச்சு நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வாக்கு குறைந்துள்ளது. 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளனர். 13 இடங்களில் 3ம் இடத்திற்கு சென்றுள்ளனர். 

அதிமுகவின் விசுவாச தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் நிற்கிறார்கள். மக்களும் எங்களுக்குத்தான் ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள். அமித் ஷா சொன்ன ஆலோசனைகளை ஏற்காததற்கான பலனை எடப்பாடி பழனிசாமி இன்று அனுபவிக்கிறார். இடைத்தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு எடப்பாடி பழனிசாமி பயத்தில் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

unmaiFeb 20, 2025 - 11:44:00 AM | Posted IP 162.1*****

admk katchiyai makkal epavo purakanichitaanga.. neenga onnu sernthaalum entha payanum irukathu.. ini tamilnaatil admk aatchi vara povathu kidaiyathu.. intha katchi innum rendu moonu thundugalaga udaiyum nilayil thaan ullathu...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory