» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 3 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்!

புதன் 26, மார்ச் 2025 10:26:51 AM (IST)

தமிழகத்தில் நாளை மார்ச் மாதம் 27 ந் தேதி முதல் 29 வரை 3 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் படிப்படி யாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகபட்சமாக வேலூரில் 99.7 டிகிரி வெப்பமும், குறைந்த பட்சமாக கொடைக்கானலில் 48.2 டிகிரி பாரன்கீட் வெப்பமும் பதிவாகியுள்ளது. தூத்துக்குடியில் அதிகபட்சமாக 90 டிகிரியும், நெல்லையில் 94.1 டிகிரியும், கன்னியாகுமரியில் 95 டிகிரி பாரன்கீட் வெப்பமும் பதிவாகியுள்ளது.

மேலும் நாளை 27ந் தேதி வியாழக்கிழமை முதல் 29 ந் தேதி சனிக்கிழமை வரையிலான 3 நாட்கள் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory