» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னையில் தொடர் நகைப் பறிப்பில் ஈடுபட்டவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!
புதன் 26, மார்ச் 2025 10:43:33 AM (IST)
சென்னையில் ஒரே நேரத்தில் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் நகைப் பறிப்பில் ஈடுபட்டவரை போலீசார் என்வுகன்டரில் சுட்டுக் கொன்றனர்.
சென்னை திருவான்மியூர், பெசண்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் காலை 6 மணி முதல் 7 மணி வரை நகைப் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. இதையடுத்து நகைப் பறிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையங்களிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும், இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் விமானத்தில் செல்வதற்கு தயாரான 2 பேரை செவ்வாய்க்கிழமை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் ஹைதராபாத்திற்கு தப்பிச் செல்ல முயன்றதும், அவர்கள் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட ஜாஃபர் குலாம் ஹுசைன் மீது பல்வேறு மாநிலங்களில் நகைப் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், சென்னையில் திருடப்பட்ட நகைகளை தரமணி பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக கூறியதை அடுத்து காவல் ஆய்வாளர் புகாரி தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த நகைகளை பறிமுதல் செய்வதற்காக ஜாஃபர் குலாம் ஹுசைனை போலீசார் தரமணி ரயில் நிலையம் அருகே அழைத்துச் சென்றனர்.
அப்போது, தரமணி ரயில் நிலையம் அருகே திடீரென தான் பதுக்கி வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து போலீசாரை சுட்டுவிட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது.இதையடுத்து தற்காப்புக்காக ஜாஃபர் குலாம் ஹுசைனை போலீசார் துப்பாக்கியால் சுட்டத்தில் ஜாஃபரின் மார்பில் குண்டு பயந்து சுருண்டு விழுந்துள்ளார்.
பின்னர் உயிருக்கு போராடிய ஜாஃபரை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான ஜாஃபர் குலாம் ஹுசைன் உடலை உடல்கூறாய்வுக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், ஜாஃபர் குலாம் பயன்படுத்திய இருசக்கர வாகனம், கைத்துப்பாக்கி உள்ளிட்ட பொருள்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜாஃபர் மீது பல்வேறு மாநிலங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவர்கள் ரானிய கொள்ளையர்கள் எனவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் : ஆட்சியர் தகவல்!
சனி 19, ஏப்ரல் 2025 5:12:02 PM (IST)

என்னுடைய ரசிகர்கள் மட்டுமல்ல.. த.வெ.கவின் விர்ச்சுவல் வாரியர்ஸ்: விஜய் பேச்சு
சனி 19, ஏப்ரல் 2025 4:44:50 PM (IST)

தமிழக மக்களின் அவுட் ஆஃப் கன்ட்ரோல் ஆக ஸ்டாலின் உள்ளார்: தமிழிசை விமர்சனம்!
சனி 19, ஏப்ரல் 2025 4:32:20 PM (IST)

தமிழகத்தில் இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும்: நயினார் நாகேந்திரன் நம்பிக்கை
சனி 19, ஏப்ரல் 2025 4:18:14 PM (IST)

மனசாட்சி உள்ள எவரும் விஸ்வகர்மா திட்டத்தை ஏற்க மாட்டார்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
சனி 19, ஏப்ரல் 2025 3:45:56 PM (IST)

தமிழ்நாட்டில் 10% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
சனி 19, ஏப்ரல் 2025 12:42:11 PM (IST)

KANNANMar 26, 2025 - 11:41:01 AM | Posted IP 162.1*****