» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு ஊழியர்களுக்கு ஏப்.2ம் தேதி சம்பளம் வரவு வைக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

புதன் 26, மார்ச் 2025 5:16:05 PM (IST)

அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு மார்ச் மாதம் சம்பளம் ஏப்.2ம் தேதி வரவு வைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதியம் தள்ளிப்போகிறது. 2024-2025ம் நிதியாண்டின் கடைசி நாள் மார்ச் 31ம் தேதி நிறைவு பெறுகிறது. ஆனால் அன்று ரம்ஜான் பண்டிகை வருவதால் விடுமுறையாகும். அதேபோல் மார்ச் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதுடன் தெலுங்கு வருடப்பிறப்பு ஆகும்.

அதேபோல் மார்ச் 29ம் தேதி சனிக்கிழமை வருகிறது. ஏப்ரல் 1ம் தேதியை பொறுத்தவரை வங்கி கணக்கு தொடக்கம் என்பதால் அன்று எந்த பணிகளும் வங்கிகளில் நடைபெறாது. எனவே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இந்த முறை ஏப்ரல் 2ம் தேதி தான் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிக்க குறிப்பில் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் சுமார் 9.30 இலட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், 7.05 இலட்சம் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோரது மார்ச் மாதச் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் /குடும்ப ஓய்வூதியம் ஆகியவை இவ்வாண்டு ஏப்ரல் 1 அன்று வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், பணியாளர் மற்றும் ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் 02.04.2025 வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory