» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 8:09:48 PM (IST)

தமிழ்நாட்டிற்கு பல திட்டங்கள், கூடுதல் நிதி ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள், அவர்கள் அழுதுவிட்டு போகட்டும் என பிரதமர் மோடி பேசினார்..
ராமேஸ்வரத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அப்போது அவர் ஜம்முவில் உயர்மட்ட பாலம், மும்பையில் மிக நீளமான ரெயில் பாலம், பாம்பனில் செங்குத்து தூக்குப்பாலம் என பட்டியலிட்டு பிரதமர் மோடி பேசினார்.
மேலும் அவர் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் சாலை, விமானம், துறைமுகம், குடிநீர், கேஸ் போன்றவைகளுக்காக கட்டமைப்புகள் 6 மடங்கு அதிகரிப்பு. இந்தியாவில் முதல் புல்லட் ரெயில்களுக்கான பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருந்தபோது தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதியை விட கூடுதலாக நிதி வழங்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 3 மடங்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு பல திட்டங்கள், கூடுதல் நிதி ஒதுக்கியும் சிலர் அழுதுகொண்டே இருக்கிறார்கள், அவர்கள் அழுதுவிட்டு போகட்டும்.
பா.ஜ.க. ஆட்சிக்கு முன்னதாக தமிழக ரெயில்வேக்கு ரூ.900 கோடி மட்டுமே கிடைத்தது. தற்போது ரூ.6000 கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரெயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 7 மடங்கு நிதி அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளில் கிராமப்புறம், நெடுஞ்சாலைகள் துறை மூலம் தமிழ்நாட்டில் 4,000 கி.மீ. அளவிற்கு சாலை போடப்பட்டுள்ளது. தற்போது ரூ.8000 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வல்லமை எவ்வளவு உயர்கிறதோ, அதே அளவு இந்தியாவில் வலிமை உயரும் என்று அவர் பேசினார். குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மதுரையில் ஓய்வுபெற்ற டிஎஸ்பி மர்ம சாவு: பூட்டிய வீட்டில் இருந்து உடல் மீட்பு
புதன் 9, ஏப்ரல் 2025 5:46:34 PM (IST)

சகோதரன் கைது: காவல்நிலையம் முன்பு விஷம் குடித்த 2 சகோதரிகள்; ஒருவர் உயிரிழப்பு!
புதன் 9, ஏப்ரல் 2025 5:16:00 PM (IST)

தென்காசி, கோவை உட்பட 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு
புதன் 9, ஏப்ரல் 2025 4:36:09 PM (IST)

நீட் எதிர்ப்பு என்ற பெயரில் சுயநல நாடகம்: முதல்வர் ஸ்டாலின் மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!
புதன் 9, ஏப்ரல் 2025 12:08:58 PM (IST)

குமரி அனந்தன் உடலுக்கு கனிமொழி எம்பி அஞ்சலி : தமிழிசைக்கு ஆறுதல் கூறினார்!
புதன் 9, ஏப்ரல் 2025 11:33:44 AM (IST)

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவு : முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!
புதன் 9, ஏப்ரல் 2025 11:02:46 AM (IST)

ராமநாதபூபதிApr 7, 2025 - 05:33:30 PM | Posted IP 162.1*****