» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய விவகாரம்: மன்னிப்பு கோரினார் அமைச்சர் பொன்முடி
சனி 12, ஏப்ரல் 2025 5:40:59 PM (IST)
பெண்கள் குறித்து தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

மேலும் திமுக எம்.பி. கனிமொழியும் கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிக்கப்பட்டது. திமுக துணை பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து பொன்முடி விடுவிக்கப்படுகிறார் என்று திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனையடுத்து திமுக துணை பொதுச் செயலாளராக திருச்சி சிவா எம்.பி. நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் திமுக முன்னாள் துணை பொதுச் செயலாளரும், வனத்துறை அமைச்சருமான பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன். மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
தமிழன்Apr 12, 2025 - 06:17:21 PM | Posted IP 172.7*****
தவறாக பேசிவிட்டு மன்னிப்பு தேவையா. மன்னிப்பு கேட்பதற்கு பதில் உங்கள் மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிடுங்கள்.உங்களைப்போல் ஆட்களால் செல்வாக்கு குறைய ஆரம்பித்துவிட்டது.
மேலும் தொடரும் செய்திகள்

என்னுடைய ரசிகர்கள் மட்டுமல்ல.. த.வெ.கவின் விர்ச்சுவல் வாரியர்ஸ்: விஜய் பேச்சு
சனி 19, ஏப்ரல் 2025 4:44:50 PM (IST)

தமிழக மக்களின் அவுட் ஆஃப் கன்ட்ரோல் ஆக ஸ்டாலின் உள்ளார்: தமிழிசை விமர்சனம்!
சனி 19, ஏப்ரல் 2025 4:32:20 PM (IST)

தமிழகத்தில் இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும்: நயினார் நாகேந்திரன் நம்பிக்கை
சனி 19, ஏப்ரல் 2025 4:18:14 PM (IST)

மனசாட்சி உள்ள எவரும் விஸ்வகர்மா திட்டத்தை ஏற்க மாட்டார்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
சனி 19, ஏப்ரல் 2025 3:45:56 PM (IST)

தமிழ்நாட்டில் 10% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
சனி 19, ஏப்ரல் 2025 12:42:11 PM (IST)

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவிப்பு
சனி 19, ஏப்ரல் 2025 12:26:23 PM (IST)

டேய்Apr 13, 2025 - 06:19:45 PM | Posted IP 172.7*****