» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவிப்பு

சனி 19, ஏப்ரல் 2025 12:26:23 PM (IST)

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் துரை வைகோ அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதிமுக தலைவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களில் செய்திகளை கொடுக்கிறார் ஒருவர். கட்சி மற்றும் தலைமைக்கு தீரா பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் பணியாற்ற விரும்பவில்லை. என்னால் இயக்கத்துக்கோ, தலைவருக்கோ எள் முனை கூட சேதாரம் வந்துவிடக்கூடாது என இந்த முடிவை எடுத்துள்ளேன்.

கடந்த 7 ஆண்டுகளாக நான் மேற்கொண்ட முயற்சிகளை கட்சியினர் தொடர வேண்டும். ஏப்ரல் 20 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில் பங்கேற்பதாக துரை வைகோ தெரிவித்துள்ளார்.

நாளை நடைபெரும் மதிமுக நிர்வாகக்குழுவில் மல்லை சத்யா தனிமைப்படுத்தப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தொலைகாட்சி செய்தியை பார்த்துதான் துரை வைகோவின் விலகலை அறிகிறேன். கட்சி பொறுப்பில் இருந்து விலகும் துரை வைகோ முடிவு அதிர்ச்சி அளிக்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory