» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்ய சிறப்பு முகாம்: ஆட்சியர்

வெள்ளி 9, மே 2025 3:44:06 PM (IST)

குமரி மாவட்டத்தில் மே 12 முதல் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்யும் முகாம் நடைபெற உள்ளது. 

இதுகுறித்து ஆட்சியர் ஆர்.அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பில், "முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைகள், டயலஸிஸ், புற்றுநோய் சிகிச்சை, மாரடைப்பு சிகிச்சை, கர்ப்பப்பை கட்டிகள் தொடர்பான சிகிச்சை, விபத்து எலும்பு முறிவு சிகிச்சை உட்பட பல சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.1,20,000/-க்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம். 

இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை அவசியம். இத்திட்டத்திற்கான அடையான அட்டை தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் காப்பீடு திட்ட அலுவலகத்தில் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தொலைவில் உள்ள கிராமங்களில் இருந்து வரும் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. அதனடிப்படையில் கிராமங்கள் தோறும் முதலமைச்சர் காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்யும் முகாம்கள் நடத்திட  அறிவுறுத்தப்பட்டது.

அதனடிப்படையில் முதற்கட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் முகாம்கள் நடைபெறவுள்ளது. 12.05.2025 அன்று  வி.பி.ஆர்.சி கட்டிடம் குலசேகரபுரத்திலும், 13.05.2025 அன்று கோவளம் வி.பி.ஆர்.சி கட்டிடடத்திலும், 14.05.2025 அன்று இரவிப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அகஸ்தீஸ்வரம் நூலக கட்டடிடத்திலும், 15.05.2025 அன்று பறக்கை ஊராட்சி அலுவலகத்திலும், 16.05.2025 அன்று இராமபுரம் பஞ்சாயத்து அலுவலகத்திலும், 

17.05.2025 அன்று தேரேகால்புதூர் பஞ்சாயத்து அலுவலகத்திலும், 19.05.2025 அன்று மருங்கூர் பேரூராட்சி அலுவலகத்திலும், 20.05.2025  அன்று அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி அலுவலகத்திலும், 21.05.2025 அன்று அஞ்சுகிராமம் பஞ்சாயத்து அலுவலகத்திலும், 22.05.2025 அன்று கன்னியான்குளம் பஞ்சாயத்து அலுவலகத்திலும், 

23.05.2025 அன்று லீபுரம் சமூகநலக்கூடத்திலும், 24.05.2025 அன்று நீண்டகரை அ திறன் மேம்பாட்டு மையத்திலும், 26.05.2025 அன்று புத்தேரி பஞ்சாயத்து அலுவலகத்திலும், 27.05.2025 அன்று பெருவிளை மேற்கு மண்டல அலுவலகத்திலும்,  28.05.2025 அன்று புத்தளம் பேரூராட்சி அலுவலகத்திலும், 29.05.2025 அன்று தேரூர் பேரூராட்சி அலுவலகத்திலும், 30.05.2025 அன்று வேம்பனூர் (மேலசங்கரன்குழி) பஞ்சாயத்து அலுவலகத்திலும், 

31.05.2025 அன்று தெங்கம்புதூர் மண்டல அலுவலகத்திலும், 02.06.2025 அன்று அழகப்பபுரம் பேரூராட்சி அலுவலகத்திலும், 03.06.2025 அன்று கணபதிபுரம் (நீண்டகரை அ) பேரூராட்சி அலுவலகத்திலும்,  04.06.2025 அன்று  கொட்டாரம் பேரூராட்சி அலுவலகத்திலும், 05.06.2025 அன்று மயிலாடி பஞ்சாயத்து அலுவலகத்திலும், 06.06.2025 அன்று நல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்திலும், 09.06.2025 அன்று இராஜாக்கமங்கலம் அம்பேத்கர் சமுதாய நலக்கூடத்திலும், 10.06.2025 அன்று  சுசீந்திரம் பேரூராட்சி அலுவலகத்திலும்,  

12.06.2025 அன்று தர்மபுரம் வடக்கு சாமக்கரை சமுதாய நல கூடத்திலும், 13.06.2025 அன்று கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்திலும்,  14.06.2025 அன்று தாமரைக்குளம் தெற்கு பேரூராட்சி அலுவலகத்திலும், 16.06.2025 அன்று மதுசூதனன்புரம் (தெங்கம்புதூர்) மண்டல அலுவலகத்திலும், 17.06.2025 அன்று வடசேரி புதிய மாநகராட்சி அலுவலகத்திலும், 18.06.2025, 19.06.2025 மற்றும் 20.06.2025 ஆகிய தினங்கள் வடிவீஸ்வரம் பழைய மாநகராட்சி அலுவலகத்திலும், 21.06.2025, 23.06.2025, 24.06.2025 ஆகிய தினங்கள் புதிய நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திலும் முகாம்கள் நடைபெற உள்ளது.

முகாமிற்கு வருகை தரும் பொதுமக்கள் வருமான சான்றிதழ், ரேஷன் கார்டு நகல், ஏதேனும் ஒரு குடும்ப உறுப்பினரின் ஆதார் நகல் உள்ளிட்டவைகளை முகாமிற்கு கொண்டு வர வேண்டும். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை இல்லாத தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள்  வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு, தங்கள் விவரங்களை பதிவு செய்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அடையாள அட்டை பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory