» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆம்புலன்ஸ் பணிகளுக்கு மே 12ல் ஆட்கள் தேர்வு முகாம்: ஆட்சியர் தகவல்
சனி 10, மே 2025 4:47:43 PM (IST)
கோட்டார் அரசு சித்தா கல்லூரியில் வருகிற 12ம் தேதி 108, 102, மற்றும் 155377 ஆம்புலன்ஸ் பணிகளுக்கான களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான 108, 102, 155377 ஆம்புலன்ஸ் பணிகளுக்கு ஆள் சேர்ப்பு முகாம் மே12 தேதி கோட்டார் அரசு ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.
தமிழகம் முழுவதும் 108, 102, 155377 ஆம்புலன்ஸ் செயல்படுகிறது. 108 சேவை ஒரு கட்டணம் இல்லாத மருத்துவம் காவல் மற்றும் தீ முதலிய அவசர சேவைகளுக்கான ஒருங்கிணைந்த அழைப்பு எண்ணாகும். இந்த சேவை பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்கக்கூடிய முற்றிலும் இலவச சேவையாகும்.102 & 155377 ஒரு கட்டணம் இல்லாத சேவை. இந்த சேவை பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்கக்கூடிய முற்றிலும் இலவச சேவையாகும்.
தமிழக அரசு தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் EMRI GREEN HEALTH services நிறுவனத்துடன், அவசரகால சேவைகளுக்காக பரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இணைந்து தமிழக மக்களுக்காக செயலாற்றுகிறது. சென்னையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை, தொழிலாளர் ஆணையர் அலுவலகம் பின்புறம் DMS வளாகம்,தேனாம்பேட்டை ,சென்னை.என்ற முகவரியை தலைமை இடமாகக் கொண்டு 108 அவசர கால சேவை மையம் இயங்கி வருகிறது
EMRI GREEN HEALTH services நிறுவனம் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமினை நடத்த இருக்கிறது. அதற்கான விவரங்கள் கீழ் வருமாறு, பணி நேரம் -12 மணி நேர ஸி/ப்ட் முறையில் இரவு மற்றும் பகல் ஷிப்ட் என மாறும். வெளியூர்களில் இருந்து வரும் விண்ணப்பதாரர்கள் போக்குவரத்துக்கான ஏற்பாடுகளை அவரவர்களே செய்து கொள்ள வேண்டும் இதற்காக தனியாக படி எதுவும் வழங்கப்பட மாட்டாது.
இதில் பணிபுரிய வேலைவாய்ப்பு முகாம் வரும் மே 12தேதி திங்கள்கிழமை கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் ஆயுர் வேதா மருத்துவ கல்லூரி மருத்துவ மனை வளாகம் 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. மருத்துவ உதவியாளருக்கு உண்டான தகுதிகள் பின்வருமாறு,
மருத்துவ உதவியாளருக்கான தகுதிகள்
B.sc nursing, GNM , ANM, DMLT (12 ம் வகுப்பிற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்)
LIFE SCIENCE -- Bsc Zoology, Botany ,Bio Chemistry, Microbiology Biotechnology , இதில் ஏதோ ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மாத ஊதியம் ரூபாய் 16990(மொத்த ஊதியம்)
நேர்முக தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை
1. எழுத்து தேர்வு
2. மருத்துவ நேர்முகம், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை
3. மனித வளத்துறையின் நேர்முகத் தேர்வு
இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்படுபவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.
ஓட்டுநருக்கான தகுதிகள் பின்வருமாறு:
ஓட்டுநருக்கான தகுதிகள், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத ஊதியம் ரூபாய் 16790 (மொத்த ஊதியம்)
நேர்முகத் தேர்வு அன்று 24 வயதிற்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் .162.5 cm குறையாமல் இருக்க வேண்டும்.
இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் Badge வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனித வளத்துறை நேர்காணல், பார்வை சம்பந்தப்பட்ட தேர்வு, விதிகளுக்கான தேர்வு, சோதனை ஓட்டம் (Test Drive) ஆகிய முறைகளில் தேர்வுகள் நடைபெறும். இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பத்து நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 7397724841, 7397724822, 7397724825, 7397724853, 7397724848 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
திங்கள் 12, மே 2025 5:33:36 PM (IST)

தமிழகத்தில் மே 14, 15ல் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
திங்கள் 12, மே 2025 4:57:09 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 12, மே 2025 4:35:02 PM (IST)

கன்னியாகுமரி - ஹவுரா தினசரி ரயிலாக இயக்க வேண்டும் : பயணிகள் கோரிக்கை
திங்கள் 12, மே 2025 3:12:51 PM (IST)

பிள்ளைமார், முதலியார் சமுதாயத்திற்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு : மாநில தலைவர் வலியுறுத்தல்
திங்கள் 12, மே 2025 12:50:38 PM (IST)

கள்ளழகர் திருவிழாவில் புனிதமான பாரம்பரியத்தை கொண்டாடுகிறோம் : ஆளுநர் ரவி வாழ்த்து!
திங்கள் 12, மே 2025 12:34:52 PM (IST)
