» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரியில் சிறுவர்கள் ஓட்டிய 20 வாகனங்கள் பறிமுதல் : போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை

திங்கள் 12, மே 2025 10:22:01 AM (IST)



குமரி மாவட்டத்தில் 18-வயது குறைவான ஓட்டுனர் உரிமம் இல்லாமல்  ஓட்டிய  20 இருசக்கர வாகனங்களை போக்குவரத்து காவல்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஸ்டாலின் உத்தரவுப்படி காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர்  மகேஷ் குமார் மேற்பார்வையில்  போக்குவரத்து காவல்துறையினர் விபத்தை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக நேற்று கன்னியாகுமரி போக்குவரத்து காவல் ஆய்வாளர்  அருண், அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் போக்குவரத்து  உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ், மற்றும் போக்குவரத்து காவலர்கள் கன்னியாகுமரி  மற்றும் சர்ச் ரோடு பகுதியில் வாகன தணிக்கையின் போது  18 வயது குறைவான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி வந்த  20 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

மேலும் 18 வயது குறைவான குழந்தைகளிடம் வாகனங்களை இயக்க அனுமதிக்க கூடாது என பெற்றோர்களிடத்தில்  போக்குவரத்து காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory