» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பத்தாம் வகுப்பு தேர்வு: தமிழ்நாட்டில் 93.80 சதவீதம் தேர்ச்சி: மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம்!

வெள்ளி 16, மே 2025 10:36:02 AM (IST)

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை முதலிடம் பிடித்துள்ளது.

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். காலை 9 மணிக்கு வெளியாகி உள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in மற்றும் www.tnresults.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டில் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்கள் எழுதிய பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டன. அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு நாள் முன்னதாக வெளியான பிளஸ்-2 பொதுத் தேர்வில் 95.03 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

இந்த நிலையில், 19-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகளும் 2 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படும் என்று நேற்று முன்தினம் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 28-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி வரை நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித் தேர்வர்கள், 272 சிறை கைதிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினார்கள்.

இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவு இன்று வெளியாகின. அதன்படி தேர்ச்சி விகிதம் - 93.80 சதவீதம். ஆகும்.

தேர்ச்சி பெற்றவர்கள்: 8,17,261 (93.80 சதவீதம்)

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - சிவகங்கை மாவட்டம் முதலிடம்
மாணவியர் 4,17,183 (95.88 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்கள் 4,00.078 (91.74 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்களை விட4,14 சதவீதம் மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்விற்கு வருகைபுரியாதவர்கள்: 15,652பேர் ஆகும்

சிவகங்கையில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் 98.31% மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக விருதுநகர் - 97.45%

தூத்துக்குடி - 96.76%

கன்னியாகுமரி - 96.66%

திருச்சி 96.61%

அரசுப் பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்

அரசுப் பள்ளிகளில் இம்முறை அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிவகங்கை - 97.49%

விருதுநகர் - 95.57%

கன்னியாகுமரி - 95.47%

திருச்சி - 95.42%

தூத்துக்குடி - 95.40%

தேர்வு எழுதிய மொத்த மாணாக்கர்கள் 8,71,239. இதில் 817261 மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 93.80% ஆகும்.

தேர்வு எழுதிய 4,35,119 மாணவிகளில் 4,17,183 மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 95.88% தேர்ச்சி ஆகும்.

தேர்வு எழுதிய 4,36,120 மாணவர்களில் 4,00,078 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 91.74% தேர்ச்சி ஆகும்.

தேர்வு எழுதிய 12,290 மாற்றும் திறனாளி மாணாக்கர்களில் 11,409 மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 92.83% ஆகும்.

தேர்வு எழுதிய 237 சிறைவாசிகளில் 230 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.05% தேர்ச்சி ஆகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory