» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிளஸ் 1 தேர்வில் மாவட்ட வாரியாக தேர்ச்சி: அரியலூர் முதலிடம் : தூத்துக்குடி 5வது இடம்!

வெள்ளி 16, மே 2025 11:27:12 AM (IST)

பிளஸ் 1 தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் 97.76% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதல் இடம் பிடித்துள்ளனர். 

அரியலூர் - 97.76%

ஈரோடு - 96.97%

விருதுநகர் - 96.23%

கோயம்பத்தூர் - 95.77%

தூத்துக்குடி - 95.07%

அரசுப் பள்ளிகளில் அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்

அரியலூர் - 96.94%

ஈரோடு - 95.37%

நாகை - 93.07%

விருதுநகர் - 92.07

சிவகங்கை - 91.97%

தேர்வு எழுதிய மொத்த மாணாக்கர்கள் 8,07,098 இதில் 7,43,232 மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 92.09% ஆகும்.

தேர்வு எழுதிய 4,24,610 மாணவிகளில் 4,03,949 மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 95.13% தேர்ச்சி ஆகும்.

தேர்வு எழுதிய 3,82,488 மாணவர்களில் 3,39,283 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 88.70% தேர்ச்சி ஆகும்.

மாணவர்களை விட மாணவிகள் 6.43% தேர்ச்சி அடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 0.92% தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தேர்வு எழுதிய 9,205 மாற்றுத் திறனாளிகளில் 8,460 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 91.91% ஆகும்.

தேர்வு எழுதிய 125 சிறைவாசிகளில் 113 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 90.40% ஆகும்.

தேர்வு எழுதிய 4,326 தனித்தேர்வர்களில் 950 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 21.96% ஆகும்.

100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

பிளஸ் 1 தேர்வு எழுதிய மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை - 7558

100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை - 2,042

100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 282

பள்ளி மேலாண்மை வாரியாக தேர்ச்சி

அரசுப் பள்ளிகள் - 87.37%

அரசு உதவிபெறும் பள்ளிகள் - 93.09%

தனியார் சுயநிதிப் பள்ளிகள் - 98.03%

இருபாலர் பள்ளிகள் - 92.40%

பெண்கள் பள்ளிகள் - 95.02%

ஆண்கள் பள்ளிகள் - 83.66%

ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகள் 11.36% கூடுதலாகத் தேர்ச்சி விகிதத்தைக் காட்டியுள்ளன. இருபாலர் பயிலும் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 8.74% கூடுதலாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

பாடப் பிரிவு வாரியாக தேர்ச்சி

அறிவியல் பாடப் பிரிவுகள் - 95.08%

வணிகவியல் பாடப் பிரிவு - 87.33%

கலைப் பிரிவுகள் - 77.94%

தொழிற்பாடப் பிரிவுகள் - 78.31%


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory