» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தயாநிதி மாறனின் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை: சன் டி.வி. நெட்வொர்க் விளக்கம்
வெள்ளி 20, ஜூன் 2025 4:12:32 PM (IST)

கலாநிதி மாறன் மீது தயாநிதி மாறன் முன்வைத்த குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என்று சன் டி.வி. நெட்வொர்க் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
திமுக எம்.பி. தயாநிதி மாறன், தனது அண்ணன் கலாநிதி மாறன் உட்பட எட்டு பேருக்கு எதிராக சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதில், சன் டி.வி. குழுமப் பங்குகளை கலாநிதி மாறன் மோசடியாகத் தனக்கு மாற்றிக் கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
முரசொலி மாறன் உடல்நிலை சரியில்லாதபோது, சட்ட விரோதமாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பங்குகளை மாற்றியதாகவும், இதனால் குடும்ப உறுப்பினர்களுக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை என்றும் தயாநிதி மாறன் தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வாரத்திற்குள் பங்குகளைத் திருப்பித் தராவிட்டால், சம்பந்தப்பட்ட மத்திய துறைகளிடம் புகார் அளித்து சன் குழும வணிகங்களை நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றும், சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று தயாநிதி மாறன் எச்சரித்துள்ளார்.
இதனால் இந்திய பங்குச் சந்தை நிஃப்டி (NSE) மற்றும் தேசிய பங்குச் சந்தை (BSE) ஆகியவற்றில் சிக்கல் ஏற்பட்டுவிடக் கூடாது என சன் டி.வி. நெட்வொர்க், இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என விளக்கக் கடிதம் அனுப்பியுள்ளது.
இந்த கடித்தில் கூறியிருப்பதாவது: 22 ஆண்டுகளுக்கு முன் தனியார் நிறுவனமாக செயல்பட்டபோது இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். அதற்கும் தற்போதைய நிகழ்வுக்கும் சம்பந்தமில்லை. இதுதொடர்பாக வெளியான செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை. தவறாக வழிநடத்தக் கூடியவை. வியூகத்தின் அடிப்படையில் இந்தச் செய்தி பரப்பப்படுகிறது. இது முற்றிலும் குடும்ப விவகாரம்.
சன் டிவியின் அனைத்து நடவடிக்கைகளும் முறையாக சட்டவிதிகளுக்கு உட்பட்டு தான் நடைபெற்றன. மேலும், தயாநிதி மாறன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் சன் டிவியின் அன்றாட நடவடிக்கையை ஒருபோதும் பாதிக்காது. அவர் குடும்ப உறுப்பினர் என்ற முறையில், இந்த விவகாரம் முற்றிலும் தனிப்பட்ட ரீதியிலானது. இவ்வாறு விளக்கக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குரூப்-4 தேர்வு குளறுபடிகளுக்கு தமிழ்நாடு அரசே பொறுப்பு : மறுதேர்வு நடத்த சீமான் வலியுறுத்தல்!!
செவ்வாய் 15, ஜூலை 2025 8:20:28 PM (IST)

வண்டலூர் பூங்காவில் அனகோண்டா பாம்பு 10 குட்டிகள் ஈன்றது: ஊழியர்கள் மகிழ்ச்சி!
செவ்வாய் 15, ஜூலை 2025 5:21:16 PM (IST)

திமுகவின் தேர்தல் யுக்திக்கு அரசின் நிர்வாகத்தை பலி கொடுக்கலாமா? த.மா.கா. விமர்சனம்
செவ்வாய் 15, ஜூலை 2025 4:57:10 PM (IST)

அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை மாணவர் சேர்க்கை: கால அவகாசம் நீட்டிப்பு!
செவ்வாய் 15, ஜூலை 2025 4:50:38 PM (IST)

கொலை வழக்கில் ஜாமீனில் வந்த தூத்துக்குடி வாலிபர் படுகொலை... சேலத்தில் பயங்கரம்!!
செவ்வாய் 15, ஜூலை 2025 3:16:01 PM (IST)

கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராஜர் 123–வது பிறந்தநாள் விழா: அமைச்சர் மரியாதை
செவ்வாய் 15, ஜூலை 2025 12:46:03 PM (IST)
