» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை: வானதி சீனிவாசன் பேட்டி!!
புதன் 25, ஜூன் 2025 5:22:49 PM (IST)
முருக பக்தர்கள் மாநாட்டால் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் கூட்டணி நன்றாக உள்ளது என்று வானதி சீனிவாசன் கூறினார்.

இன்று தி.மு.க., காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால் நெருக்கடி நிலை காலகட்டத்தில் தான் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் கொடுமைகளை அனுபவித்தார்கள். அரசியல் கட்சியினர் சிறைகளில் மிக மோசமாக நடத்தப்பட்டார்கள்.எதற்காக நாங்கள் இதைச் சொல்கிறோம். கடந்த கால வரலாற்றை மறக்கக்கூடாது. இதற்காக காங்கிரஸ் கட்சி இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை.
இன்று திருப்பூரில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் நெருக்கடி நிலை உள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது. முருக பக்தர்கள் மாநாட்டால் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் கூட்டணி நன்றாக உள்ளது.கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷா தெளிவாக பேசி விட்டார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க. தான் தலைமை தாங்குகிறது. தி.மு.க. ஆட்சி அகற்றப்படுவது உறுதி என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாநிலங்களவை உறுப்பினராக ஜூலை 25-ம் தேதி கமல்ஹாசன் பதவி ஏற்பு!
சனி 12, ஜூலை 2025 5:16:32 PM (IST)

குரூப் 4 தேர்வு வினாத்தாள் எதுவும் கசியவில்லை: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் பேட்டி
சனி 12, ஜூலை 2025 4:41:25 PM (IST)

பள்ளி வகுப்பறைகளில் மாற்றம்: இனி கடைசி பெஞ்ச் கிடையாது.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!
சனி 12, ஜூலை 2025 3:47:08 PM (IST)

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது : அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
சனி 12, ஜூலை 2025 1:05:17 PM (IST)

குரூப் 4 வினாத்தாள் கசிய வாய்ப்பு? தனியார் பஸ்களில் எடுத்து செல்லப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 11, ஜூலை 2025 5:18:09 PM (IST)

ஆளுநரின் அதிகாரங்களில் முதல்வர் தலையிடக் கூடாது : ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டி!
வெள்ளி 11, ஜூலை 2025 4:33:19 PM (IST)
