» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)
குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாடு முழுவதும் 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில்கூட போட்டியிடாத மற்றும் இருப்பிடம் (அலுவலகம்) கண்டறிய முடியாத பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகளை (சுருPPள) முதற்கட்டமாக பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அரசியல் அமைப்பை சீர்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள 2,800-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளில் பல கட்சிகள் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளாக தொடர தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாதது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு சென்றதனை தொடர்ந்து இத்தகைய கட்சிகளை அடையாளம் காணும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு; தற்போது வரை 345 கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அந்த வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாட்டில் அடையாளம் காணப்பட்ட 24 கட்சிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்தியன் விக்டரி கட்சி, நேஷனலிஸ்ட் சேரிட்டி காங்கிரஸ், தமிழக ஸ்தாபன காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
எந்த கட்சியும் தேவையில்லாமல் பட்டியலில் இருந்து நீக்கப்படக் கூடாது என்பதற்காக, சம்மந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அந்த கட்சிகளுக்கு காரணம் கூற போதிய வாய்ப்பு அளித்து நோட்டீஸ் (Show Cause Notice) அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும், எந்தவொரு பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியையும் பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பான இறுதி முடிவை இந்திய தேர்தல் ஆணையமே மேற்கொள்ளும். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நள்ளிரவில் மின்சாரக் கட்டணத்தை 3.16% உயர்த்திய தமிழக அரசு: அன்புமணி கண்டனம்
செவ்வாய் 1, ஜூலை 2025 3:17:21 PM (IST)

அஜித்குமார் மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:06:46 PM (IST)

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 7பேர் உயிரிழப்பு
செவ்வாய் 1, ஜூலை 2025 11:59:03 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது
செவ்வாய் 1, ஜூலை 2025 10:58:04 AM (IST)

லாக் அப் மரணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் : விஜய் வலியுறுத்தல்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:37:21 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)
