» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்!

வியாழன் 3, ஜூலை 2025 8:55:59 AM (IST)



காவல் துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் இல்லத்துக்கு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

காவல் துறை விசாரணையில் பலியான அஜித்குமார் இல்லத்துக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும், அவர்களுக்கு தவெக சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரணமாகக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளதாகவும் குடும்பத்தாரிடம் விஜய் தெரிவித்தார்.

முன்னதாக, வீட்டில் இருந்த அஜித்குமார் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். மேலும், காவல் துறையின் இத்தகைய கொடூரமான நடவடிக்கையை கண்டித்து தவெக சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory