» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

ஞாயிறு 13, ஜூலை 2025 11:05:42 AM (IST)

தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83.

தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பத்மஸ்ரீ மற்றும் நந்தி விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். விஜயவாடா கிழக்குத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

சிலகாலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பால் அவதிப்பட்டு வந்தார். சில தினங்களுக்கு முன்பு மெலிந்த உடலுடன் இருக்கும் அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளானது. இந்த நிலையில் 83 வயதாகும் கோட்டா சீனிவாச ராவ் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory