» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போதையில் ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் : பாதுகாப்பு கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

வெள்ளி 18, ஜூலை 2025 12:15:21 PM (IST)



விருநகரில் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கு போதையில் வந்த மாணவர்களை தலைமையாசிரியரிடம் அழைத்து செல்ல முயன்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சண்முகசுந்தரம் போதையில் வந்த மாணவர்கள் மதுபாட்டிலால் தாக்கி படுகாயம் அடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதையடுத்து பள்ளி ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் எதிரில் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட தலைவர் வாஞ்சிநாதன் தலைமையில் மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட இணைச் செயலாளர் ஜான் விக்டர் மற்றும் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விருநகரில் 2வது முறையாக ஆசிரியர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட நிகழ்வால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பள்ளியில் போலீசாரை நியமித்து பள்ளிக்கும். ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு தர வேண்டும் எனவும், இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க உடனடியாக ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் கோஷங்கள் எழுப்பினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory