» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிரதமர் மோடியுடன் கமல்ஹாசன் சந்திப்பு

வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 11:36:24 AM (IST)



பிரதமர் நரேந்திர மோடியை மாநிலங்களவை எம்.பி.,யும், நடிகருமான கமல்ஹாசன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியுள்ளார்.

தமிழகத்தில் இருந்து நாடாளுமன்ற மேலவை எம்.பியாக தேர்வான நடிகர் கமல்ஹாசன் கடந்த ஜூலை 25 ம் தேதி எம்.பி.,யாக பதவியேற்று கொண்டார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், கமல்ஹாசன் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:

பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். ஒரு கலைஞனாகவும், தமிழகத்தின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளை தெரிவித் திருக்கிறேன். அவற்றுள் தலையாயது கீழடி. தமிழின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்க சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். இவ்வாறு அந்த பதிவில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory