» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் விரைவில் நலம்பெற விழைகிறேன்: மு.க.ஸ்டாலின் பதிவு

வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 4:34:22 PM (IST)

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் (80 வயது) தற்போது நாகாலாந்து மாநில ஆளுநராக பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலையில் இல.கணேசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையொட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியறிந்து மிகுந்த கவலை கொள்கிறேன். அவர் விரைவில் நலம்பெற்று, மீண்டும் நல்ல உடல்நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று விழைகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory