» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுகவுடன்தான் எங்கள் கூட்டணி: வைகோ பேச்சு!

ஞாயிறு 10, ஆகஸ்ட் 2025 10:07:20 AM (IST)



மனப்பூர்வமாக திமுகவுடன் கரம் கோர்த்து நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். பணி ஆற்றுவோம் என்று தூத்துக்குடியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார் 

ஸ்டெர்லைட் போராட்ட வரலாறு.... இன்றைய அரசியல்! என்ற தலைப்பில் தூத்துக்குடியில் வி.வி.டி.சிக்னல் அருகே மதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.  அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதித்திட கூடாது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி 2026 தேர்தலுக்குப் பின்னரும் ஆட்சி மலர வேண்டும். நாம் எங்கே எந்த கூட்டணியில் இருந்தாலும் நன்றி விசுவாசத்தோடு உழைப்பவர்கள். 

இதில் ஆயிரம் கட்டுக் கதைகள் பொய் செய்திகளை ஏடுகள் வெளியிடலாம். எட்டுக்காலம் போடலாம்.  உக்ரைன்-ரஷிய போர் நடந்து வரும் நிலையில் ரஷியாவில் சிக்கியுள்ள தமிழக மருத்துவ மாணவரை மீட்க உதவுமாறு துரை வைகோவிடம் அவரது பெற்றோர் கூறியுள்ளனர். அந்த கோரிக்கையை வலியுறுத்தவே மனிதாபிமான அடிப்படையில் பிரதமரை துரை வைகோ சந்தித்தார். நான், கூட்டணி தர்மத்தை எப்போதும் மதிப்பவன். இந்தக் கூட்டணிக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன். திமுகவுடன்தான் எங்கள் கூட்டணி. அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory