» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தை போல் பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டம் : முதல்வர் பகவந்த் மான் விருப்பம்!

செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 11:39:35 AM (IST)



தமிழகத்தை போல் பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டம் கொண்டுவர விரும்புகிறேன் என்று அந்த மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார்.

சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற காலை உணவுத் திட்டம் விரிவாக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று கலந்துகொண்டார். இந்த நிகழ்வில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து திட்டத்தை தொடங்கிவைத்த பகவந்த் மான், மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய பகவந்த் மான் பேசியதாவது: ”காலை உணவுத் திட்டம் போல் சிறந்தது வேறெதுவும் இல்லை. பசியுடன் வரும் குழந்தைகளால் படிக்க முடியாது. தமிழகத்தை போல் பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டத்தை கொண்டுவர விரும்புகிறேன். சுமார் 18 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவது என்பது மிகப்பெரிய சாதனை. குழந்தைகளின் உடல்நலத்தில் மாநில அரசு அக்கறை கொண்டுள்ளது.

பஞ்சாபில் அனைத்து நகரங்களிலும் தென்னிந்திய உணவுகளான உப்புமா, தோசை போன்றவை விற்கப்படுகிறது. தென்னிந்திய உணவுகள் தேசிய உணவு போல், நாடு முழுவதும் விற்கப்படுகிறது. பஞ்சாப் உணவுகள் தமிழகத்திலும் விற்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கல்வி, சுகாதாரத்துக்கு பஞ்சாப் அரசும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஆம் ஆத்மி கிளினிக்களில் 70,000 பேர் நாள்தோறும் இலவசமாக சிகிச்சை பெறுகிறார்கள்.

நாளையே பஞ்சாப் அமைச்சரவையில் காலை உணவுத் திட்டம் குறித்து விவாதிக்கவுள்ளேன். குழந்தைகள்தான் நாட்டின் எதிர்காலம், அவர்களால்தான் நாடு முன்னேறும். அப்போதுதான் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க முடியும், வெறும் பேச்சுகளால் முடியாது.” எனத் தெரிவித்தார். மேலும், பஞ்சாப் என்பது பகத்சிங், ராஜகுரு போன்றவர்கள் வீர மரணம் அடைந்த மண், அதனை பார்க்க நீங்கள் கண்டிப்பாக வர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory