» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரியில் பாலியல், திருட்டு, கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது!

செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 3:33:21 PM (IST)



குமரி மாவட்டத்தில் பாலியல், திருட்டு, கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை இரணியல் போலீசார் கைது செய்தனர். 

குமரி மாவட்டம், வில்லுக்குறி அடுத்த திருவிடைக்கோடு பகுதியில் உள்ள 9வது சிவாலயம் மகாதேவர் கோவிலில் கடந்த 22ம் தேதி மர்ம நபர் கோவிலில் உள்ளே சென்று திருட முயன்றுள்ளார். சப்தம் கேட்டு அப்பகுதி மக்கள் கோவிலுக்கு அருகில் வரும்போது அந்த முகமூடி அணிந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

இச்சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது முகமூடி அணிந்த நபர் ஒருவர் செல்வது தெரிய வந்தது . இந்த நிலையில் நேற்று காலையில் இரணியல் காவல் நிலையம் அருகே இரணியல் காவல்துறை உதவி ஆய்வாளர் மகேந்திரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

அப்போது சந்தேகத்திற்கு இடமாக அங்கு மோட்டார் பைக்கில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துக் கொண்டிருந்தார். பின் போலீசார் அவர் கொண்டு வந்த வாகனத்தை சோதனை செய்தபோது விற்பனைக்காக வைத்திருந்த 30 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் குளச்சல் அருகே உள்ள முத்துக்குமாரபுரம் வெள்ளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் மகன் சிவா என்ற கழுகு சிவா (25) என்பது தெரியவந்தது. பின் போலீசார் அவரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவலை தெரிவித்தார் அதில் அவர் கடந்த 22 ம்தேதி திருவிடைக்கோடு மகாதேவர் ஆலயத்தில் முகமூடி அணிந்து திருட முயற்சி செய்தது தெரியவந்தது. 

அதன்பேரில் உதவி ஆய்வாளர் மகேந்திரன் திருட்டு மற்றும் கஞ்சா வழக்குகள் பதிவு செய்து இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு பின் சிறையில் அடைத்தார். சிவா என்ற கழுகு சிவா மீது குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் குளச்சல் காவல் நிலையத்தில் 7 வழக்குகளும் தற்போது இரணியல் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் உள்ளது. குளச்சல் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory