» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குண்டுக்கட்டாக தூக்கி வீசிய விஜய்யின் பவுன்சர்கள்: போலீசில் இளைஞர் புகார்!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 4:54:45 PM (IST)

மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் விஜய்யின் பாதுகாவலர்கள் தன்னை குண்டுக்கட்டாக தூக்கி வீசியதாக இளைஞர் ஒருவர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு 21-ம் தேதி நடைபெற்றது. இந்தநிலையில், தவெக மதுரை மாநாட்டில், 2500 ஆண் பவுன்சர்கள், 500 பெண் பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். விஜய் "உங்கள் விஜய்.... நான் வரேன்...” என்ற பாடலுடன் தொண்டர்கள் மத்தியில் வலம் வந்தார்.. அப்போது விஜயை நெருங்கி வந்த தொண்டர்களை அருகில் இருந்த பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர்.
ரேம்ப் வாக் மேடையில் ரசிகர்கள் யாரும் ஏறிவிடக்கூடாது என இரும்புக்கம்பிகளில் கிரீஸ் தடவி இருந்தனர் விழா ஏற்பாட்டாளர்கள். ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விஜய் ராம்ப் வாக் சென்றபோது அவரது ரசிகர்கள், பவுன்சர்ஸ்களையும் தாண்டி மேடையில் ஏறிக் குதித்து விஜய் அருகே நெருங்கி வந்தனர். அவர்களை தடுத்த பவுன்சர்கள் குட்டுக் கட்டாக மேடையில் இருந்து தூக்கி எறிந்தனர். அப்போது ஒரு ரசிகர் கீழிருந்து ராம்ப்வாக் மேடையில் ஏறியபோது பவுன்சர் ஒருவர் அவரை அலேக்காகத்தூக்கி தரையில் எறிந்தார்.
இதில் துடிதுடித்துப்போன அந்த ரசிகர் காலில் முறிவு ஏற்பட்டு அந்த இடத்தில் இருந்து எழுந்து செல்ல முடியாமல் வேதனையில் அழுது கதறியபடி தரையில் புரண்டு தவித்தார். அப்போது அவரை யாரும் கண்டுகொள்ளவோ, உதவி செய்யவோ முன்வரவில்லை. விஜய் பேசிக்கொண்டிருந்ததை மட்டுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதேபோல் மற்றொரு இளைஞரை பவுன்சர்கள் தூக்கி எறிந்தபோது அவர், லாவகமாக கம்பியைப்பிடித்து தொற்றிக் கொண்டார். அவர் கீழே விழுந்திருந்தால் அவரது கைகால்கள் உடைந்திருக்கும் அல்லது உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும்.இதனை வீடியோவாகப் பார்த்த அந்த இளைஞர்களின் குடும்பத்தினர், தங்கள் பிள்ளைகள் மீது பவுன்சர்கள் நடத்திய தாக்குதலை பார்த்து நடு நடுங்கி போயினர்.
இந்தநிலையில், மதுரை தவெக மாநாட்டில் விஜயின் பாதுகாவலர்கள் தன்னை குண்டுக்கட்டாக தூக்கி வீசியதாக பெரியம்மா பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் என்ற இளைஞர் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
SivaSriAug 26, 2025 - 05:22:19 PM | Posted IP 104.2*****
கூட்டத்திற்கு போனது உன் குற்றம் பெற்ற தாய் ஏதாவது வேலை சொன்னால் செய்வது கிடையாது.பட்டுட்டு திருந்துங்கடா ஜென்மங்கள்.அவன் உங்களை வராதீங்க நீங்கள் போகலைன்னா அவ பாட்டுக்கு ரேம்ப்ல நடந்து போயிருப்பான்.பெற்றோர் சொல் கேளுங்க.யாரால சாப்பாடு கிடையாது.நீ உழைச்சாதான் சாப்பாடு வேலை ய பாரு போ போ.
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் செப்.5ஆம் தேதி மது விற்பனைக்கு தடை: டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:40:17 PM (IST)

மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் : சசிகாந்த் எம்பியுடன் ராகுல் பேச்சு!
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:31:11 PM (IST)

பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பு: 40 டன் குப்பைகள் அகற்றம்
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:02:28 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அதிகாரிகளின் முறையற்ற செயல் : முருக பக்தர்கள் குமுறல்!
திங்கள் 1, செப்டம்பர் 2025 10:48:43 AM (IST)

தூத்துக்குடியை எழில்மிகு சுகாதாரமான மாநகராக மாற்றுவேன்: ஆணையர் பிரியங்கா பேட்டி!
திங்கள் 1, செப்டம்பர் 2025 10:21:01 AM (IST)

சமூக வலைதளத்தில் சினிமா பாடல் மூலம் அச்சுறுத்திய ரவுடிக்கு போலீசார் நூதன தண்டனை
திங்கள் 1, செப்டம்பர் 2025 8:19:07 AM (IST)

அட முட்டா பயித்திகார பயலுகAug 26, 2025 - 07:23:40 PM | Posted IP 162.1*****