» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளி ரவுடி நாகேந்திரன் மரணம்!
வியாழன் 9, அக்டோபர் 2025 3:48:40 PM (IST)
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாகவும் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இறந்தார்

இந்த வழக்கை விசாரித்த செம்பியம் போலீசார் வழக்கின் குற்றப்பத்திரிகையை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்தனர். தற்போது, இந்த வழக்கை மாவட்ட முதன்மை நீதிபதி கார்த்திகேயன் விசாரித்து வருகிறார். இதற்கிடையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த சூழலில் ஆயுள் தண்டனை கைதியும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாகவும் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரனுக்கு, கல்லீரல் பாதிப்பால் உடல்நிலை மோசமானதை அடுத்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நாகேந்திரன் இன்று காலை உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவட்டாறு கோவில் நகை திருட்டு வழக்கில் மேல் முறையீடு செய்தவர்கள் விடுதலை!
வெள்ளி 10, அக்டோபர் 2025 12:52:50 PM (IST)

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நாளை நடைபெறும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 10, அக்டோபர் 2025 12:45:08 PM (IST)

தூத்துக்குடியில் தரமற்ற முறையில் கழிவுநீர் கால்வாய் பணிகள் - பொதுமக்கள் குற்றச்சாட்டு!
வெள்ளி 10, அக்டோபர் 2025 11:31:20 AM (IST)

காதல் மனைவியை நடுரோட்டில் குத்திக்கொன்ற கணவர் : நடத்தை சந்தேகத்தில் பயங்கரம்!
வெள்ளி 10, அக்டோபர் 2025 11:13:44 AM (IST)

குரூப் 1 தேர்வர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
வெள்ளி 10, அக்டோபர் 2025 11:05:13 AM (IST)

கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர்: தமிழக முதல்வருக்கு சத்யராஜ் நன்றி!
வியாழன் 9, அக்டோபர் 2025 5:55:14 PM (IST)
