» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் 9277 மனுக்களுக்கு தீர்வு: ஆட்சியர் தகவல்
வியாழன் 9, அக்டோபர் 2025 5:18:19 PM (IST)

குமரி மாவட்டத்தில் இதுவரை நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 9277 மனுக்களுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கோட்டார் எம்.டி.பி சமூக நலக்கூடத்தில் இன்று (09.10.2025) நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி, அவர்களின் பகுதிகளிலேயே நேரிடையாக சென்று முகாம்கள் நடத்தி கோரிக்கை மனுக்களை பெற, உங்களுடன் ஸ்டாலின் என்ற அற்புதமான திட்டம் அக்டோபர் மாதம் 15ம் தேதி வரை நடத்திட அறிவுறுத்தியுள்ளார்கள்.
அதனடிப்படையில் இன்று நாகர்கோவில் மாநகராட்சி 39-வது வார்டுக்குட்பட்ட பகுதி பொதுமக்களுக்கு கோட்டார் எம்.டி.பி சமூக நலக்கூடத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது. மேலும் மருத்துவ முகாம் நடைபெறும் அரங்கினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் 15.07.2025 முதல் 08.10.2025 வரை 270 முகாம்கள் நடத்தப்பட்டு 1,35,041 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடியாக சொத்துவரி பெயர்மாற்றம், பிறப்பு சான்றிதழ், மின் கட்டண பெயர்மாற்றம், புதிய மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், தொழிலாளர் நல வாரிய அட்டைகள், குடும்ப அட்டைகளில் பெயர்மாற்றம்முகவரி மாற்றம், ஆதார் அட்டைகளில் பெயர்மாற்றம், கடனுதவிகள், பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட 9277 மனுக்களுக்கு தீர்வுகள் மற்றும் அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து முகாமிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்திடவும், பெறப்படும் மனுக்களை இணையத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யவும் முகாம் ஒருங்கிணைப்பாளர்க்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகில் நடைபெறும் முகாம்களுக்கு சென்று மனுவினை அளித்து தங்களின் தேவைகளுக்கு தீர்வு காண உங்களுடன் ஸ்டாலின் முகாமினை பயன்படுத்தி கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, நாகர்கோவில் மாநகர் நகர்நல அலுவலர் மரு.ஆல்பர் மதியரசு, மண்டலதலைவர் கோகிலா வாணி, துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவட்டாறு கோவில் நகை திருட்டு வழக்கில் மேல் முறையீடு செய்தவர்கள் விடுதலை!
வெள்ளி 10, அக்டோபர் 2025 12:52:50 PM (IST)

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நாளை நடைபெறும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 10, அக்டோபர் 2025 12:45:08 PM (IST)

தூத்துக்குடியில் தரமற்ற முறையில் கழிவுநீர் கால்வாய் பணிகள் - பொதுமக்கள் குற்றச்சாட்டு!
வெள்ளி 10, அக்டோபர் 2025 11:31:20 AM (IST)

காதல் மனைவியை நடுரோட்டில் குத்திக்கொன்ற கணவர் : நடத்தை சந்தேகத்தில் பயங்கரம்!
வெள்ளி 10, அக்டோபர் 2025 11:13:44 AM (IST)

குரூப் 1 தேர்வர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
வெள்ளி 10, அக்டோபர் 2025 11:05:13 AM (IST)

கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர்: தமிழக முதல்வருக்கு சத்யராஜ் நன்றி!
வியாழன் 9, அக்டோபர் 2025 5:55:14 PM (IST)
