» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விவசாய பணியில் ஈடுபட்டு இருந்த போது மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு

வெள்ளி 17, அக்டோபர் 2025 9:05:55 AM (IST)



கடலூரில் விவசாய பணியில் ஈடுபட்டு இருந்த போது மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. பருவமழை தொடங்கிய முதல் நாளே பல்வேறு இடங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பல மாவட்டங்களில் பரவலாக இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்தாண்டு இயல்பை விட அதிக மழை இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. இந்நிலையில், கடலூர் அருகே மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அரகே கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், அப்பகுதியில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்த நிலத்தில் களை எடுத்து கொண்டு இருந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் பாரிஜாதம், ராஜேஸ்வரி, சின்னப்பொண்ணு, கணிதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தவமணி என்பவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மின்னல் தாக்கி ஒரே ஊரை சேர்ந்த 4 பெண்கள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory