» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நான்கு வழிச்சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட 6 வாலிபர்கள் கைது: 6 மோட்டார் பைக் பறிமுதல்

திங்கள் 27, அக்டோபர் 2025 8:45:36 AM (IST)



வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட 6பேரை போலீசார் கைது செய்து, 6 மோட்டார் பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.

நெல்லை மாவட்டத்தில் இளைஞர்கள் சிலர் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களில் விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து முக்கிய சாலை வழியாக பைக் ரேசில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதனை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். 

இவர்கள் ஆபத்தான முறையில் அதிவேகமாக சாலையில் செல்வதால், மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதோடு விபத்து அபாயமும் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேசில் ஈடுபடுபவர்களை போலீசார் அவ்வப்போது பிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை வள்ளியூரில் இருந்து நான்கு வழிச்சாலை வழியாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் 6 மோட்டார் சைக்கிள்களில் வாலிபர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையிலான போலீசார் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக் ரேசில் ஈடுபட்டு வந்த 6 பேரை மடக்கிப்பிடித்தனர்.

விசாரணையில், அந்த வாலிபர்கள் குமரி மாவட்டம் வெள்ளமடத்தை சேர்ந்த அஸ்வந்த், தக்கலையை சேர்ந்த ஜெகன், குமரியை சேர்ந்த வெஸ்லி, நாகர்கோவிலை சேர்ந்த சாமில் ஜான், நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியை சேர்ந்த அஜய் சபரி மற்றும் பென்ஷன் ஆகியோர் என்பது தெரியவந்தது.

நண்பர்களான இவர்கள் அனைவரும் விடுமுறை தினமான நேற்று பைக் ரேசில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் அதிரடியாக கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து விலை உயர்ந்த 6 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory