» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மூன்று புதிய கிளைகள் திறப்பு விழா
செவ்வாய் 28, அக்டோபர் 2025 10:14:14 AM (IST)

ஆந்திரப் பிரதேசம், கேரளாவில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மூன்று புதிய கிளைகள் திறப்பு விழா நடைபெற்றது.
 தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஒரு தலை சிறந்த ஷெட்யூல்டு கமர்சியல் வங்கி (பாரத ரிசர்வ் வங்கியின் அங்கிகாரம் பெற்றது), பங்கு சந்தைகளில் தனது பங்கினை பட்டியலிட்டதை அடுத்து தனது தொலைநோக்கு பார்வையாக மீண்டும் இந்தியா முழுவதுமான விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. 
 வங்கியின் 598வது கிளை ஆந்திரப் பிரதேசம் தெனாலியில் மகாதேவா டால் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட்  தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், முனகல மோகன் ஷியாம் பிரசாத் திறந்து துவக்கி வைத்தார். ஆந்திரப் பிரதேசம் மங்களகிரியில் 599வது கிளையை மங்களகிரி சேனேத வஸ்திர உத்பத்திதருள சங்கம் தலைவர் ஜொன்னதுலா வர பிரசாத ராவ் (மணி) துவக்கி வைத்தார்.
 
கேரளா விழிஞ்சம் பகுதியில் 600வது கிளையை லேடி ஆஃப் குட் வோயேஜ் லத்தீன் கத்தோலிக்க தேவாலய அருட்தந்தை நிக்கோலஸ். டி, கிளையை துவக்கி வைத்தார். விழாவில் வங்கியின் மண்டல தலைவர்கள், ஊழியர்கள், அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 
 புதிய கிளைகள் திறப்பு குறித்து வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சலீ எஸ் நாயர் கூறுகையில், "வங்கியானது மூன்று புதிய கிளைகளடி துவக்கியுள்ளது. மேலும் இன்னும் அதிகமான கிளைகளை இந்தியா முழுவதும் துவங்கிட திட்டமிட்டிருக்கிறது. இந்த புதிய கிளையின் துவக்க விழாவின் மகிழ்ச்சியினை வங்கியின் அனைத்து உடைமைதாரர்களுக்கும் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
 
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB), ஒரு பெயர் பெற்ற பழைமையான தனியார் துறை வங்கியாகும். தூத்துக்குடியை தலைமை அலுவலகமாக கொண்டு இயங்கிவரும் இந்த வங்கி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருவதோடு, தொடர்ந்து இலாபம் ஈட்டியும் வருகிறது. 
 இந்த வங்கியானது, இந்தியா முழுவதிலும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 600 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்களை கொண்டு சுமார் 53 லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது. வங்கியினைப் பற்றி www.tmb.in என்ற இணையதளம் மேலும் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். 
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பயிர்க்கடனுக்காக வெயிலில் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கும் நிலை: விவசாயிகள் கோரிக்கை!
வியாழன் 30, அக்டோபர் 2025 7:53:10 PM (IST)

தங்களுக்குத் தாங்களே பாராட்டு விழா நடத்தும் திமுக அரசு : அண்ணாமல் சாடல்!
வியாழன் 30, அக்டோபர் 2025 5:43:35 PM (IST)

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம்
வியாழன் 30, அக்டோபர் 2025 5:32:00 PM (IST)

தமிழர்கள் மனதில் தமிழ் உணர்ச்சியை ஊட்டியவர் சீமான் : வைகோ புகழாரம்
வியாழன் 30, அக்டோபர் 2025 4:49:51 PM (IST)

தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சி: ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் சபதம்
வியாழன் 30, அக்டோபர் 2025 4:13:22 PM (IST)

முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
வியாழன் 30, அக்டோபர் 2025 12:52:46 PM (IST)




