» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மதுரை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: 2 பேர் கைது
வியாழன் 30, அக்டோபர் 2025 11:58:15 AM (IST)
மதுரை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்பிலான உயர்ரக போதைப்பொருளை கடத்தி வந்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.
இலங்கை கொழும்புவில் இருந்து மதுரை வந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்பட்டு வந்துள்ளதாக சுங்கத்துறை நுண்ணரிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கொழும்பு விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக சோதனையிட்டனர்.
தஞ்சையைச் சேர்ந்த முகமதுமைதீன் (26), சென்னையை சேர்ந்த சாகுல்ஹமீது(50) ஆகியோர் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரையும் தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் கொண்டு வந்த உடைமைகளையும் சோதனை செய்தனர்.
அப்போது 8 கிலோ ‘ஹைரோ போனிக்’ என்ற உயர்ரக போதைப்பொருளை மறைத்து கடத்தி கொண்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்த போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். அந்த 2 பேரையும் கைது செய்தனர். தாய்லாந்தில் இருந்து இந்த போதைப்பொருளை வாங்கி அதனை இலங்கை வழியாக மதுரைக்கு கடத்தி வந்ததாகவும், அதன் இந்திய மதிப்பு ரூ.8 கோடி இருக்கும் எனவும் அதிகாரிகள் கூறினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பயிர்க்கடனுக்காக வெயிலில் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கும் நிலை: விவசாயிகள் கோரிக்கை!
வியாழன் 30, அக்டோபர் 2025 7:53:10 PM (IST)

தங்களுக்குத் தாங்களே பாராட்டு விழா நடத்தும் திமுக அரசு : அண்ணாமல் சாடல்!
வியாழன் 30, அக்டோபர் 2025 5:43:35 PM (IST)

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம்
வியாழன் 30, அக்டோபர் 2025 5:32:00 PM (IST)

தமிழர்கள் மனதில் தமிழ் உணர்ச்சியை ஊட்டியவர் சீமான் : வைகோ புகழாரம்
வியாழன் 30, அக்டோபர் 2025 4:49:51 PM (IST)

தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சி: ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் சபதம்
வியாழன் 30, அக்டோபர் 2025 4:13:22 PM (IST)

முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
வியாழன் 30, அக்டோபர் 2025 12:52:46 PM (IST)




