» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இயற்கையைக் காப்போம்: கன்னியாகுமரி முதல் சென்னை வரை மிதிவண்டிப் பேரணி!

வியாழன் 6, நவம்பர் 2025 3:15:35 PM (IST)

இயற்கை வளப் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பசுமைப் பயணம் மிதிவண்டிப் பேரணி கன்னியாகுமரியில் தொடங்கியது. 

தமிழக துறவியர் பேரவை, தமிழ்நாடு அய்க்கஃப் (AICUF) மற்றும் சூழலியல் இயக்கங்களின் கூட்டு ஒருங்கிணைப்பில் இயற்கையைக் காப்போம், வாழ்வுரிமையை மீட்போம்" என்ற முழக்கத்துடன், சுற்றுச்சூழல் நீதி மற்றும் இயற்கை வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'பசுமைப் பயணம்' மிதிவண்டிப் பேரணி, நவம்பர் 5, 2025 முதல் நவம்பர் 20, 2025 வரை தமிழகத்தில் நடைபெறவுள்ளது.

இயற்கை அன்னையைக் காக்கவும், பொதுமக்கள் மற்றும் இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்த பயணம் கன்னியாகுமரியில் தொடங்கி சென்னை வரை செல்கிறது. 16 நாட்கள், 720 கி.மீ தூரம் கொண்ட இந்த விழிப்புணர்வுப் பயணத்தில், சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் சந்திக்கும் நோக்கில், முக்கிய நகரங்கள் வழியாகப் பயணத் திட்டம் அமைந்துள்ளது. இந்தப் பசுமைப் பயணம் நவம்பர் 5-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. 

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய முக்கிய நகரங்கள் வழியாக பசுமை விழிப்புணர்வு நிகழ்வுகள், அடையாள அணிவகுப்புகள், விழிப்புணர்வு உரைகள், பசுமை உறுதிமொழி, கலாச்சார நிகழ்வுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பொருட்கள் வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்வுகளை நடத்தி நவம்பர் 20-ம் தேதி சென்னையில் நிறைவுறும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory